பக்கம் எண் :

142பால காண்டம்  

நெடுங்கண்     துவரிதழ் வாய். தரள  நகை  - ஒளி பொருந்திய
நெற்றியையும்  கருமையான  நீண்ட  கண்களையும்   பவளம் போன்ற
உதடுகளையும்  கொண்ட  வாயையும்  முத்துப் போன்ற   பற்களையும்;
துணை  மென்  கொங்கை  மாதர்
- மெத்தென்ற இரு தனங்களையும்
உடைய பெண்கள்; எழுந்து யாம் ஆகி அருந்தவனைக் கொணர்தும்
என வணக்கம் செய்தார்
- அந்த அவையிலே எழுந்து நின்று. நாங்கள்
சென்று  அத  தவமுனியை  அழைத்து  வருவோம்  என்று வணங்கிக்
கூறினர். 

ஓதம்:    குளிர்ச்சி. நெடுங்கடல்: பண்புத்தொகை. சுற்றிலும் கடலால்
சூழப்பட்ட  உலகை  “கடல்  ஆடை உலகு” என்றார். ‘நீராரும்  கடல்
உடுத்த   நில   மடந்தை’   என்பார்.   வாழ்மனிதர்:   விதைத்தொகை.
குணித்தல்:  சிந்தித்தல்.  “சோதிநுதல்....... மாதர்” எனக்  கூறியிருக்கும்
வருணனைகளாலும்.  யாம்  சென்று முனிவனை  அழைத்து வருவோம்
என்று  கூறிய  துணிவுடைமையினாலும்  அம்மாதர் விலை   மகளிராம்
என்பது  புலனாகும்.  “கொணர்தும்”  ‘தும்’  காலம்  காட்டும்  விகுதி.
தன்மைப் பன்மை வினைமுற்று.

மனிதர்களை     விலங்குகளாகக்  கருதும்.   அந்தக்    குற்றமற்ற.
தவமுனியை  இங்கு  அழைத்து  வரும்  வகை   யாது  என. மன்னன்
சிந்திக்கின்ற வேளையில். மாதர் சிலர் எழுந்து நாங்கள்  சென்று அந்த
அருந்தவனை இங்குக் கொணர்வோம் என்றனர் என்பது கருத்து.    37
 

217.

“ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப. அரசன்
   மகிழ்ந்து. அவர்க்கு. அணி. தூசு. ஆதி ஆய
பாங்கு உள மற்றவை அருளி. “பனிப் பிறையைப்
   பழித்த நுதல். பணைத்த வேய்த் தோள்.
ஏங்கும் இடை. தடித்த முலை. இருண்ட குழல்.
   மருண்ட விழி. இலவச் செவ் வாய்ப்
பூங்கொடியீர்! ஏகும்” என. தொழுது இறைஞ்சி.
   இரதமிசைப் போயினாரே

 

ஆங்கு   அவர் அம்மொழி உரைப்ப- அங்கு. அம்மகளிர். அச்
சொற்களைச்  சொல்ல; அரசன்  மகிழ்ந்து. அவர்க்கு  அணி. தூசு.
ஆதியாய  பாங்குள  மற்றவை  அருளி
- (அதைக் கேட்ட) மன்னன்
மகிழ்ந்து  அவர்களுக்கு  வேண்டிய  அணிகலன்கள்  ஆடை  மற்றும்
தேவையானவைகளைக்  கொடுத்து; பனிப் பிறையைப் பழித்த நுதல்-
குளிர்ந்த  பிறை மதியைப் பழித்த நெற்றி; பணைத்த வேய்த் தோள்-
பருத்த  மூங்கிலை  ஒத்த தோள்கள்; ஏங்கும் இடை தடித்த முலை-
நுண்ணிய இடை. பருத்த தனம்; இருண்ட குழல் மருண்ட விழி-கரிய
கூந்தல்.  மான்போல  மருண்ட  கண்கள்; இலவச் செவ்வய்- இலவம்
பூவைப்  போலச்  சிவந்த  வாய்; பூங்கொடியீர் ஏகும் என- (ஆகிய
உறுப்பு  நலம்வாய்ந்த)  மலர்க்கொடி  போன்றவர்களே  சொல்லுங்கள்
என்று கூற; தொழுது இறைஞ்சி இரதமிசை போயினார்- அரசனைப்
பணிந்து. வணங்கித் தேர்ஏறிச் சென்றனர்.