மொழி: சொல்லாகு பெயர். அணி: அணிகலன். தூசு:ஆடை. பாங்கு உள மற்றவை: பாங்கான மற்றவைகள் உணவுப்பொருள் போன்றவையாம். ஆதிஆய: முதலானவை. வேய்+தோள்: வேய்த்தோள்: உவமைத் தொகை. பூங்கொடி: அன் மொழித் தொகை. ‘யாம் ஏகி அருந்தவனைக் கொணர்தும்’ என்று அம் மகளிர் கூற. அதைக் கேட்ட மன்னன் மகிழ்ந்து. அவர்களுக்கு வேண்டிய ஆடை. அணிகலன்களைக் கொடுத்துப் போகுமாறு கூற. அவர்கள் அரசனை வணங்கித் தேரேறிச் சென்றனர் என்பது கருத்து. “பனிப்பிறையைப் பழித்த நுதல்.....பூங்கொடியீர்” என்ற மகளிரைப் பற்றிய வருணனை முந்திய பாடலைப் போன்றதேயாம். பெண்களின் அவயவங்களைச் சிறப்பித்துக் கூறும் நயம் காண்க. தனங்களின் அமைவைத் தாங்க இயலாது இடை வறுந்துமாறு தனங்கள் பருத்துள்ளன எனவும் பொருள் கூறுவர். பெண்களின் கண்களுக்கு மருட்சி இயல்பாதலின் மான் போல மருண்ட பார்வையை உடைய கண்கள் என உரைக்கப்பட்டது. 38 |