பக்கம் எண் :

144பால காண்டம்  

அருந்தவன்   தந்தையை அற்றம் நோக்கியே- அரிய தவத்தை
உடைய   கலைக்  கோட்டு  முனிவனது  தந்தையாகிய   விபாண்டகர்
இல்லாத  சமயம்  பார்த்து; கரும் தடம்  கண்ணியர் கலைவலாளன்
இல்பொருந்தினார்
-  கரிய. அகன்ற கண்களை உடைய  அப்பெண்கள்
எல்லாக்கலைகளிலும்    வல்லவராகிய    அம்முனிவரின்     குடிலை
அடைந்தனர்;  பொருந்துபு-  அங்ஙனம்  அடைந்த  போது; விலங்கு
எனா  புரிந்து  இருந்தவர்
-  மனிதர்களை விலங்கினங்களோடு ஒப்ப
மதித்து இருக்குமவன். முனிவர்களே; இவர் என இணைய செய்தனன்-
இவர்கள் எனக் கருதிப் பின்வருமாறு செய்யத் தொடங்கினான்.

அற்றம்:     சமயம் (மறைவு).  கண்களால்  மயக்கி  வசப்படுத்தும்
தன்மையால்   கருந்தடங்  கண்ணியர்’  என்கிறார்.   கலை  வலாளன்
எல்லாக்   கலைகளிலும்   வல்லவன்   (கலைக்   கோட்டு  முனிவன்)
பொருந்துபு:  பொருந்த  (செய்பு  என்ற  வாய்பாட்டு   வினையெச்சம்
எனா:  என்று  (செயா  என்ற  வாய்பாட்டு) வினனையெச்சம்.  தந்தை
இல்லாத  தருணத்தை  எதிர்பார்த்திருந்த அம்முனிவனது  உறையுளை
அடைந்த அப்பெண்கள். தன்னைப் போன்ற தவமுனிவர்கள்  இவர்கள்
எனக் கருதி உபசரிக்கத் தொடங்கினான் என்பது கருத்து.         40
 

220.

அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து.
“இருக்க” என. இருந்த பின். இனிய கூறலும்.
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழா.
பொருக்கென எழுந்து போய். புரையுள் புக்கனர்.

 

அருக்கியம் முதலினோடு-அருக்கியம் முதலான உபசரிப்புகளோடு;
ஆசனம்  கொடுத்து
-  அமர்வதற்கு உரிய ஆசனமும் தந்து; இருக்க
என  இருந்தபின்
-  அமர்வீராக  என முனிவன்  கூற அந்த மகளிர்
அமர்ந்ததன்  பின்னர்;  இனிய  கூறலும்- இனிய உரையால் முகமன்
கூறி வரவேற்க; முருக்கு இதழ் மடந்தையர்- முருக்கம் பூப் போன்ற
உதடுகளை   உடைய  அப்பெண்கள்;  முனிவரைத் தொழா- அந்த
முனிவனைத்  தொழுது  (பின்பு);  பொருக்கென  எழுந்து  போய்-
விரைந்தெழுந்து சென்று; புரையுள் புக்கனர்- தமது பன்ன சாலையை
அடைந்தனர்.

அருக்கியம்-   கைகழுவ நீர் தருதல். வீட்டுக்கு வந்த விருந்தினரை
உபசரிக்கும்  முறைகளாக.  கை  கழுவவும்.  கால்  அலம்பவும்.  வாய்
கொப்பளிக்கவும்  நீர்  தருதல்  கூறப்படும்   இவைகளை  அருக்கியம்.
பாத்யம்.  ஆசமணீயம் என்பர் வடநூலார்.  அதனை  இங்கு. கம்பரும்
‘அருக்கியம்’  என்றார்.  ஆசனம்-  இருக்கை  இனிய  கூறல்: முகமன்
கூறுதல். முருக்கு: முள் முருங்கைப் பூ. பெண்களின்  உதடுகளுக்கு இம்
மலரை  உவமை  கூறுவர். தொழா: தொழுது (செயா என்ற வாய்பாட்டு
வினையெச்சம்)  பொருக்கென:  விரைவுக் குறிப்புச் சொல்.  புரை: வீடு
இங்குப் பன்னசாலையைக் குறிக்கும்.

வந்த    மகளிரை முனிவர்கள் எனக் கருதி- அருக்கியம் முதலியன
தந்தும்   ஆசனமளித்தும்-  முகமன்  கூறியும்   உபசரித்துக்  கலைக்
கோட்டு முனிவனை