உலக்குநர் வஞ்சகர் - இனி வஞ்சர்களாகிய அரக்கர்கள்தாம் இறப்பவர்களாவார்; உம்பரும் உய்ந்தார் - தேவர்கள் உய்வு பெறுவார்கள்; நிலக் கொடியும் துயர் நீத்தனள் - நிலமகளும் துன்பம் நீங்கினாள்; விலக்க அரும் மொய்ம்பின் -(இத்தகைய பேற்றை உலகுக்குத் தரும்) நீக்க இயலாத வலிமை உடைய; இந்த விளங்கு ஒளிநாமம் -இந்த விளங்குகின்ற ஒளியின் பெயர்; இலக்குவன் என்ன இசைத்தனர் -இலக்குவன் என்று கூறினான். உலக்குநர்: அழிபவர் (உலத்தல்: அழிதல்). உம்பர்: தேவர்கள் இடவாகு பெயர். நிலக்கொடி: நிலமகள்; கொடி: உவமை ஆகுபெயர். நீத்தல்: நீக்கல். மொய்ம்பு. வலிமை. இசைத்தனன்: கூறினான். சுமித்திரை பெற்ற பிள்ளைக்கு ‘இலக்குவன்’ என்று வசிட்டன் பெயர் சூட்டினான் என்பது கருத்து. ல?க்ஷ்மணன் என்பதற்கு உத்தம இலக்கணங்கள் அமையப் பெற்றவன் எனவும். கைங்கரிய லட்சுமியோடு கூடியிருப்பவன் என்பதும் பொருள் என்பர். நிலமகள் துயரம் நீங்குவது உறுதியாதலில் ‘நீத்தனன்’ என்றார். 119 |