ஒரு எல்லை வேறு எனச் சொல்ல இயலாதபடி; உவள் அருமறையின் ஒடு - தூய்மையான வேதங்களுடன்; ஒழிவு அறு கலையும்- நீங்காத கலைகள் பலவற்றையும்; தவன் மதிபுனை அரன்நிகர் முனிதரவே - சந்திரனைத் தலையில் அணிந்துள்ள சிவபெருமானுக்கு ஒப்பான வசிட்ட முனிவன் கற்றுத்தர. சவுளம்: குடுமிக் கல்யாணம் என்பர் (தலை முடி திருத்துதல்).உபநயம் -உபநயனம். பூணூல் அணிவித்தல் (துணைக்கண் என்பர்). ஞானக் கண் பெறுதற்குரிய சடங்கு என்பர். தருகுற்று; தரப்பெற்று (செய்து). இவ்வளவு: இவ்வளவு (இடைக்குறை)- கரை: எல்லை (வேதத்துக்கு எல்லை இல்லை என்பது குறிப்பு). இலவா: (இல+ஆ) இல்லது ஆக. கலைகள் யாவும் மறைப் பொருளையே விளக்குவதாதலின் ‘’மறைவினொடு ஒழிவறு கலை’’ என்றார் அரன். அடியார்களின் பாவத்தைக் போக்குபவன். சவுளம் மூன்றாம் ஆண்டிலும் உபநயனம். பத்தாமாண்டிலும் செய்யப்படுவதென்பர். தவள்: என்பதன் திரிபு. சவுளம் முதலிய சடங்குகளை விதிப்படி நடத்தியபின் வசிட்ட முனிவன் வேதம் மற்றும் கலைகள் பலவற்றையும் அரசகுமாரர்களுக்கு கற்பித்தான் என்பது கருத்து. முனிவனுக்குச் சிவன் உவமை - முற்றும் உணர்தலாலும் நால்வர்க்கு அறம் கூறியதாலுமாம். 124 மைந்தரின் படைப் பயிற்சி |