அருமறை முனிவரும் அமரரும் - அரிய மறைகளில் வல்ல முனிவர்களும் தேவர்களும்; அவனித் திருவும் அந்நகர் உறை செனமும் - நிலமகளும். அந்த நகரத்தில் வாழுகின்ற பொதுமக்களும்; இவர்களின் - இந்த அரசிளங் குமரரால்; நம் இடரொடு இரு வினைதுணிதரும் - நமது துன்பங்களும் அதற்குக் காரணமான இரு வினைகளும் துணிக்கப்படும்; இவண் நின்று - இவர்கள் இருக்கு இந்த இடத்திலிருந்து; ஒருபொழுது அகல்கிலம் உறை - சிறிதுபொழுதும் அகலவே மாட்டோம்; என உறுவார்; என. அப்பிள்கைளுடனே தங்கியிருப்பார். அமரர்: தேவர் (அழிவில்லாதவர் என்பது பொருள்). அவனி: நிலம். ‘’முனிவரும். தேவரும். நிலமகளும். நகரமக்களும்’ இவர்களால் நமது இடர் தீரும்’ வினையும் நீங்கும் ஆதலால் இங்கிருந்து ஒருபோதும் அகலோம் இவருடனே உறைவோம்’’ என்று உடன் உறைவாராயினர் என்பது கருத்து. துணிதரும்: துணியும் இருவினை: நல்வினையும் தீவினையுமாம். இவர்களின்: இவர்களால். அகல்கிலம்: தன்மைப் பன்மை வினைமுற்று. உறை அகல்கிலம்: உறைவதிலிருந்து (உடனிருப்பது). அகலமாட்டோம். முனிவர் முதலினோர் குமரரை விரும்புதல் கூறப்பட்டது. 126 |