பரதனும் இளவலும் ஒரு நொடி பகிராது-பரதனும். சத்துருக்கனும். ஒரு நொடிப்பொழுதேனும் பிரியாது; இரதமும் இவுழியம் இவரினும்- தேரிலும். குதிரையின் மீதும் ஏறிச் சவாரி செய்யும் போதும்; மறை நூல் உரைதரு பொழுதினும் -வேதம் முதலிய நூலக்ளை ஓதுகின்ற காலத்தினும்; ஒழிகிலர் -பிரியாதவர்களாகி; எனை ஆள் வரதனும் இளவலும் என - என்னை ஆட்கொண்டருளிய ராமபிரானையும். இலக்குவனையும் போல; மருவினர் - சேர்ந்திருந்தனர். நொடி: கை நொடிப் பொழுது. இதனை மாத்திரை என்பர். தொழிலாகு பெயராய். கால அளவை உணர்த்தி நின்றது. இவர்தல்: ஏறுதல். உரைதருதல்: ஓதுதல். ஒழிகிலர்: முற்றெச்சம். ஆள்வரதன்: வினைத்தொகை. வரதன்: வரம் தரவல்லன். இவுளி: குதிரை. பகிராது: பிரியாது. பரதனும். சத்துருக்கனும் தேரேறிச் சென்றாலும். குதிரைச் சவாரி செய்தாலும் வேதம் முதலான கலைகளை ஓதினாலும் ஒரு நொடிப் பொழுதும் பிரியாதவராகி இராமனையும். இலக்குவனையும் போலச் சேர்ந்திருந்தனர் என்பது கருத்து. பரத. சத்துருக்கனரின் ஒட்டுறவு கூறப்பட்டது. 128 |