பக்கம் எண் :

  கையடைப் படலம்205

யாசனத்தையுடைய   பிரமன் நகரமும்; கற்பக நாட்டு அணிநகரும் -
கற்பகம்  முதலிய  சிறப்புடைய  விண்நாட்டு  அழகிய நகரமும்; மணி
மாட   அயோத்தி   என்னும்   பொன்நகரும்
   -  மணிமயமான
மாடங்களை   உடைய  அயோத்தி  என்னும் இந்த நகரும்; அல்லாது
புகல் உண்டோ
- அல்லால் அடைக்கலம் அடைவதற்கு வேறு இடம்
உண்டோ?

அயோத்தியைப்    பனிவரை    முதலியவற்றுடன்    ஒப்பிட்டுக்
கூறினமையின்   ஒப்புமைக்    கூட்டஅணி.  ‘என்  அனைய’  இதில்
‘அனைய’  உவமை  உருபு.  இடையூறு:தீங்கு. பல்நகம்: பல மலைகள்.
பனிமலை:  கைலாயம்   (இமயமலை)  கைலை  மலையும். பாற்கடலும்
முறையே  சிவபிரானுக்கும்  திருமாலுக்கும் உறைவிடங்களாகும். கற்பக
நாட்டணி      நகரம்.      இந்திரனுக்குரியது.     ‘’என்னையொத்த
முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் ஏதேனும் தீங்கு நேர்ந்தால் கைலை
முதல்  அயோத்தி  வரையுள்ள இந்த இடங்கள் அல்லாது வேறு புகல்
உண்டோ’’ என்றான் விசுவாமித்திரன் என்பது கருத்து.            8
 

322.‘இன் தளிர்க் கற்பக நறுந் தேன் இடை துளிக்கும்
   நிழல் இருக்கை இழந்து போந்து.
நின்று அளிக்கும் தனிக் குடையின் நிழல் ஒதுங்கி.
   குறை இரந்து நிற்ப. நோக்கி.
குன்று அளிக்கும் குல மணித் தோள் சம்பரனைக்
   குலத்தோடும் தொலைத்து. நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ. புரந்தரன் இன்று
   ஆள்கின்றது?-அரச!’ என்றான்.
   

அரச புரந்தரன் இன்று ஆள்கின்றது-தயரத மன்னனே! இந்திரன்
இன்று ஆண்டு  கொண்டிருக்கும்  அமர  ருலக  ஆட்சி; இன்தளிர்க்
கற்பக    நறும்தேன்   இடை  துளிக்கும்  நிழல்  இருக்கை
 -
இனிய   தளிர்களை  உடைய   கற்பக   மரத்தின்  பூக்கள்   தேனை
இடையிடையே   துளிக்கின்ற  நிழலை  உடைய ஆசனத்தை; இழந்து
போந்து
-  இழந்து  விட்டு  உன்னிடம்  வந்து;  நின்று  அளிக்கும்
தனிக்குடையின்  நிழல்  ஒதுங்கி
  -   உலகனைத்தையும்   நின்று
காக்கின்ற   உனது   ஒப்பற்ற வெண்குடை  நிழலில்  ஒதுங்கி  நின்று;
குறை  இரந்து  நிற்ப  நோக்கி  -  தனது  குறைகளைச்   சொல்லி
யாசித்து நிற்க. நீ அதைப் பார்த்தபின்; குன்று அளிக்கும்  குலமணித்
தோள்   சம்பரனை
  -  மணிகளால்   அலங்கரிக்கப்பட்ட   குன்று
போன்ற தோள்களையுடைய சம்பரன் என்ற   அசுரனை   குலத்தோடும்
தொலைத்து
 - அவனது  கூட்டத்தாரோடும்  அழித்து;   நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ
- நீ உனதாக  ஆக்கிக்   கொண்டு.
அன்று  இந்திரனுக்குத்  தந்த அரசை  அல்லவா;  புரந்தரன்  இன்று
ஆன்கின்றது என்றான்
- அவ்விந்திரன்  இன்றளவும்   தன்குரியதாக
ஆட்சி செய்து வருவது என்று முனிவன் கூறினான்.