பக்கம் எண் :

  கையடைப் படலம்207

324.தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு
   இடையூறா. தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என.
   நிருதர் இடை விலக்கா வண்ணம்.
‘’செருமுகத்துக் காத்தி’’ என. ‘நின் சிறுவர்
   நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி’ என. உயிர் இரக்கும்
   கொடுங் கூற்றின். உளையச் சொன்னான்.
   

தருவனத்துள்  யான் இயற்றும் - மரங்கள் நிறைந்துள்ள காட்டில்
நான்  செய்கின்ற; தவவேள்விக்கு  இடையூறா  - பெரிய யாகத்துக்கு
இடையூறாக; தவம்  செய்வோர்கள்  வெருவர - தவம் செய்பவர்கள்
அஞ்சும்படியாக; சென்று  அடைகாம  வெகுளி  என  -  அவர்தம்
மனத்தைச்  சென்று  சேர்ந்த காமம்.  வெகுளி மயக்கங்களைப் போல;
நிருதர்   இடைவிலக்காவண்ணம்  -   அரக்கர்கள்  கெடுக்காதபடி;
செருமுகத்துக்  காத்தி  என  -  அவர்களோடு   செய்யும்   போர்
முகத்திலே   காத்தருள்  வாயாக என;  நின் சிறுவர் நால்வரினும் -
உன்புத்திரர்கள்  நால்வர்களுள்;  கரிய செம்மல் ஒருவனை - கருமை
நிறம் பொருந்திய செம்மலாகிய   ஒப்பற்றவனை;  தந்திடுதி  என  -
அளித்திடுவாயாக என்று;  உயிர்  இரக்கும்  கொடும்  கூற்றின்  -
உயிரைத் தாவெனக் கேட்கும் கொடிய கூற்றுவனைப் போல; உளையச்
சொன்னான்
- மன்னன் மனம் வருந்தும்படி முனிவன் கூறினான்.

‘தருவனம்’  - மரங்கள் அடர்ந்த வனம். தவவேள்வி - நிஷ்காம்ய
வேள்வி என்பர். இடையூறு: தீமை. ‘ஊறு’ முதல்நிலை திரிந்த தொழிற்
பெயர்.  செருமுகம்  போர்முனை. காத்தி: ஏவலொருமை வினைமுற்று.
இரத்தல்:  யாசித்தல்.  கொடும்  கூற்று:  கொடிய  கூற்றுவன் (எமன்)
கொடிய சொல் எனவும் கொள்ளலாம். உளைதல்: மனம் வருந்துதல்.11
 

325.எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்
   மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தா
   லெனச் செவியில் புகுதலோடும்.
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த.
   ஆர் உயிர் நின்று ஊசலாட.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான்
   கடுந் துயரம் - கால வேலான்.
   

எண்இலா அருந்தவத்தோன் - எண்ண முடியாத அரிய தவத்தைச்
செய்த   விசுவாமித்திரர்;  இயம்பிய   சொல்  -  சொன்ன   இந்தச்
சொற்களானது; மருமத்தின் எறிவேல்  பாய்ந்து  -  மார்பின்  மேல்
எறிந்த