பக்கம் எண் :

  கையடைப் படலம்211

அடையும்    வித்தைகளும் அளவிடற்கரியனவாம். முந்திய பாடலில்
‘உறுதி  எய்தும்  நாள்’  என்று  கூறியதற்கேற்ப.   இங்கு  ‘  விஞ்சை
வந்தெய்து காலம்’ என்றார்.                                  16
 

330.குருவின் வாசகம்
   கொண்டு. கொற்றவன்.
‘திருவின் கேள்வனைக் கொணர்மின்.
   சென்று’ என.-
‘வருக என்றனன்’
   என்னலோடும். வந்து
அருகு சார்ந்தனன்.
   அறிவின் உம்பரான்.
   

குருவின்  வாசகம் கொண்டு - குல குருவான வசிட்ட முனிவனது
சொற்களைச்   செவியேற்றுக்  கொண்டு; கொற்றவன்  - மன்னனாகிய
தயரதன்     (பக்கத்திலுள்ள   பணியாட்களைப்   பார்தது);  திருவின்
கேள்வனை
 -   (இலக்குமியின் நாயகனான திருமாலின் அவதாரமான)
ராமபிரானை; கொணர்மின்  சென்று  என  -  சென்று  அழைத்துக்
கொண்டு  வருக  என்று  சொல்ல;  வருக என்றனன் - (பணியாட்கள்
சென்று      ராமனை     அடைந்து)     தந்தை     வருக    என
அழைத்தார்;என்னலோடும்  - என்று சொல்லவே; அறிவின் உம்பரான்
- அறிவில் உயர்ந்து விளங்கும் ராமபிரான்; வந்து அருகு சார்ந்தனன்
- புறப்பட்டு வந்து. மன்னனருகில் சேர்ந்தான்.

குரு: குல குருவாகிய வசிட்டன். வாசகம்: சொல் (பேச்சு). கொண்டு:
ஏற்றுக்கொண்டு.   கொண்மின்:   அழைத்துவாருங்கள்  ‘கொணர்மின்’
என்றதால் ஏவப்பட்டோர் பலர் என்பது புலனாம். வருக: வியங்கோள்
வினைமுற்று.   சார்தல்   -   சேர்தல்  உம்பர்  தலைமை  அறிவின்
உம்பரான்: மேலான அறிவுடையவன் ‘ஞான நாயகன்’ என்னலுமாம்.17
 

331.வந்த நம்பியைத் தம்பிதன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி. ‘நல்
தந்தை நீ. தனித் தாயும் நீ. இவர்க்கு.
எந்தை! தந்தனென்; இயைந்த செய்க!’ என்றான்.
   

வந்த  நம்பியை  -  அவ்வாறு அருகு வந்து சேர்ந்த நம்பியாகிய
இராமனை;  தம்பி தன்னொடும் - ராமனை விட்டு நீங்காத தம்பியான
இலக்குவனோடும்; முந்தைய  நான்மறை முனிக்குக் காட்டி - பழைய
வேதங்களை   அறிந்தநல்  முனிவனாகிய விசுவாமித்திரனுக்குக் காட்டி;
நல்தந்தை நீ தனித்தாயும் நீ இவர்க்கு -இந்த குமாரர்களுக்கு இனித்
தாயும் தந்தையும் நீங்களே தாம்; எந்தை தந்தனன்-எந்தையே!