பக்கம் எண் :

212பால காண்டம்  

இவர்களைத்  தங்களிடம் கொடுத்தேன்; இயைந்த செய்க என்றான் -
இவர்களைக்   கொண்டு   இயைந்தபடி   காரியங்களைச்  செய்வீராக
என்றான்.

நம்பி: பெருமை உடையவன் (இராமன்). ‘தம்பி’ எனப்  பொதுப்படக்
கூறினும்    இலக்குவனையே  குறிக்கும்.  காட்டுதல்: சுட்டிக் காட்டுதல்.
எந்தை:   எந்தையே  என்னும்  விளி.  இயைந்து:  உமக்கு   இயைந்த
அல்லது   அவர்கட்  கியைந்த எனவும் பொருள் கொள்ளலாம். செய்க:
வியங்கோள்.    இராம.  இலக்குவர்களை  முனிவரிடம்  ஒப்படைத்தல்
கூறப்பட்டது..  நம்பியை- தம்பியோடு - காட்டி - தந்தனன் - இயைந்த
செய்க என்பது பொருள் முடிபாகும்.                          18
 

332.கொடுத்த மைந்தரைக் கொண்டு. சிந்தை முந்து
எடுத்த சீற்றம் விட்டு. இனிது வாழ்த்தி. ‘மேல்
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம்’ எனா.
நடத்தல் மேயினான். நவைக்கண் நீங்கினான்.
   

கொடுத்த மைந்தரைக் கொண்டு - தயரதன் கொடுத்த பிள்ளைகள்
இருவரையும் ஏற்றுக்  கொண்டு; முந்து சிந்தை எடுத்த சீற்றம் விட்டு
- முன்னர் மனத்தில் ஏறிய  கோபத்தை  விட்டு:  இனிது  வாழ்த்தி -
மன்னனை    இனிதே   வாழ்த்தி: மேல் அடுத்து  வேள்வி  போய்
முடித்தும்  நாம்  என
 - இனிமேல் சென்று. தொடங்கிய வேள்வியை
நாம்    முடிப்போம்   என்று.;   நவைக்கண்  நீங்கினான் நடத்தல்
மேயினான்
  -  குற்றம்   நீங்கிய   முனிவனாகிய   விசுவாமித்திரன்
புறப்படலானான்.

கொடுத்த:  அடைக்கலமாகக்  கொடுத்த. கொண்டு பெற்றுக்கொண்டு
முந்து:  முன்   என்பதன்  மரூஉ. எடுத்த: மேலெழுந்த. சீற்றம்: சினம்.
அடுத்தல்.   தொடங்குதல்.  முடித்தும். தன்மைப் பன்மை வினைமுற்று.
நடத்தல்மேயினான். நடக்கத்  தொடங்கினான். நவை: குற்றம்.      19
 

333.வென்றி வாள் புடை விசித்து. மெய்ம்மைபோல
என்றும் தேய்வுறாத் தூணி யாத்து. இரு
குன்றம் போன்று உயர் தோளில். கொற்ற வில்
ஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான்
   

உலகம்   தாங்கினான்  -  காக்கும் கடவுளின் அம்சமான ராமன்;
வென்றி  வாள்  புடை  விசித்து  -  வெற்றியை  உடைய  வாளை
இடையிலே  கட்டிக் கொண்டு; மெய்ம்மை போல் - என்றும் அழியாத
உண்மை  போன்ற; என்றும் தேய்வு உறா தூணி யாத்து - அம்புகள்
என்றும்   தேயாத   அம்பறாத்தூணியைத்  தோளில்  கட்டி;  குன்றம்
போன்று  உயர்  தோளில்
-இரண்டு மலைகளைப் போன்று உயர்ந்த
(மற்றொரு)