கடக்க அறும் வலத்து எனது காவல் இது - வெல்லுதற் கரிய வலிமை உடைய என்னுடைய ஆட்சிக்கு உட்பட்டது இது; யாவும் கெட கரு அறுத்தனென் - இங்குள்ள எல்லாம் கெடும்படி கரு வறுத்துவிட்டேன்; இனி சுவை கிடக்கும் விடக்கு அரிது எனக்கருதியோ - இனிமேல் எனக்குச் சுவைமிக்க ஊன் கிடைப்பது அரியது என்று எண்ணியோ (அல்லது); விதிகொடு உந்த படக் கருதியோ - விதி தனது வலிமைகொண்டு தள்ள நீங்கள் அழிந்து போக நினைத்தோ; வந்த பரிசு பகர்மின் என்றே - இங்குவந்த தன்மையைச் சொல்லுங்கள் எனச் சொல்லி. ‘’என்றே. ஒரு வார்த்தை உரை செய்தனள்’’ எனக் கூட்டிப் பொருள் கூறினும் பொருந்தும். கடக்க+அரும்: கடக்கரும் ‘அகரம் தொக்கது வலத்த (வலம்+அத்து+அ) பெயரெச்சம். காவல்: தொழிற்பெயர். கரு அறுத்தல்: இளமையிலேயே அழித்துவிடல் விடக்கு: ஊன் ‘கொண்டு’ என்பது இடைக் குறையாய் ‘கொடு’ என நின்றது. பட: அழிய பகர்மின்: ஏவற்பன்மை பரிசு: விதம் எவராலும் வெல்ல முடியாதவள்யான். எனது காவலுக்குரிய இந்த நிலத்திலே உள்ளதெல்லாம் அழியும்படி கருவறுத்துவிட்டேன். எனக்குத் தின்ன ஊன் கிடையாதென்றெண்ணி. உணவாக வந்தீர்களோ. விதி உந்த அழிய வந்தீர்களோ? கூறுங்கள் என்றாள் என்பது பொருள். 34 |