அண்ணல் முனிவற்கு - பெருமை பொருந்திய விசுவாமித்திர முனிவனுக்கு; அது கருத்து எனினும் - அந்த அரக்கியை. கொல்வது தான் கருத்து என்றாலும்; ஆவி உண் எனவடிக்கணை தொடுக்கிலன் - அவள் உயிரை உண்டுவா வென்று கூரிய அம்பை ராமன் விடவில்லை; உயிர்க்கே துண் எனும் - உயிர்களெல்லாம் நடுங்கி அஞ்சுமாறு வினைத்தொழில் தொடங்கி உள்ளேனும் - கெட்ட செயலைத் தொடங்கியுள்ளாள் என்றாலும்; பெருந்தகை. பெண் என மனத்திடை நினைந்தான் - பெருந்தைமை உடைய இராமன் அவள் பெண் ஆயிற்றே என்று மனத்தில் எண்ணலாயினான். அண்ணல்: வெருமையுடையவன். அது: தாடகையைக் கொல்வது. துண்; நடுக்கம். பெருந்தகை: இராமன் (அன்மொழித் தொகை). பெண்கொலை என்பதால் - முனிவன் விரும்பினாலும் பெருந்தகையான இராமன் விரும்பவில்லை என்பதால் ’’ஆவி உண் என வடிக்கணை தொடுக்கிலன் பெண்என மனத்திடை நினைத்தான்’’ என்றார். 36 |