இந்திரன் இடைந்தான் - இந்திரன் இவளுடன் எதிர்க்கவந்து பின்னிட்டு ஓடினான்; தானவர் வானவர் - அரக்கர்களும் தேவர்களும்; தந்திரம்பட உடைந்து ஓடினர் - தமது சேனைகள் அழிய. சிதறி ஓடிவிட்டார்கள்; இவள் தோள் மந்திரம் எனின் - இவளது தோள்கள் மந்தர மலை போன்றது என்றால்; மைந்தரோடு ஆண்மை இனி அந்தரம்யாது - தக்க ஆண்களோடு ஆண்மையில் என்ன பேதம் இருக்கிறது? இடைந்தான்: பின்னிட்டான் (பின்வாங்கினான்). உடைந்து: சிதறி. தந்திரம்: படை. பட: அழிய. மந்திரம்: மந்தரமாலை. மைந்தர்: வலிமையுடை ஆண்கள். அந்தரம்: வேறுபாடு (பேதம்). பெண்ணாகிய இவளுக்கும். வலிமைமிக்க ஆண்களுக்கும் என்ன வேறுபாடிருக்கிறது? இந்திரன் முதலானோரும் தோற்று ஓடும்படி செய்த இவளைப் பெண் என நினைக்கலாமா. 40 |