தார் - கூன் நீங்கி. அழகு பெற்றார்; புவனம் முற்று உடைய கோவும் - உலகம் முழுதுமுடைய மன்னனான குசநாபன்; புதல்வர் இல்லாமை - புத்திரப்பேறு இல்லாமையாலே; வேள்வி தவர்களின் புரிதலோடும் - மக்கட் பேற்றுக்குரிய வேள்வியைத் தக்க தவமுனிவர் தம்முடன் சேர்ந்து செய்யவே; தகவு உறு அத்தழலின் நாப்பன் - தகுதியுடைய அந்த வேள்வித்தீயின் மத்தியில் இருந்து; கவன வேகத் துரங்கம் காதி - வேகமுடைய குதிரையைப் பெற்ற ‘காதி’ என்னும் புத்திரன்; வந்து உதயம் செய்தான் - வந்து உதித்தான். மலர்க்கை: மலர் போன்ற கை (உவமைத் தொகை). கூன: முதுகின் வளைவு. நாப்பண்: நடு. துரங்கம்: குதிரை. செல்லுதலில் விரைவுடையது என்பதால் கவன வேகத்துரங்கம் என்றார். உதயம்: தோற்றம்; பிரமதத்தன் தனது கைகளால் நீவ. அப்பெண்கள் கூன்நீங்கி அழகு பெற்றனர். குசநாபன். தனக்கு நூறுபெண்கள் இருந்தும் ஆண்மகவில்லையே என்பதால். மக்கள் பேறு கருதி வேள்வி செய்ய. அந்த வேள்வித்தீயின் மத்தியிலே ‘’ காதி’’ என்பவன் வந்து தோன்றினான் என்க. அரசர்க்குரிய சிறப்புத் தோன்றப் பிறந்தான் என்பதைக் ‘கவன வேகத் துரங்கத் காதி’ என்பதுணர்த்தி நின்றது. ‘’வந்து உதயம் செய்தான்’’. தோன்றி உதித்தான் என்க. 10 |