அதனால் நீண்டிருக்கும் கைகளை உடையோய்!; இனி நின் உழை வந்தோர் மாண்டவர் - உன்னிடம் வந்தவர்கள் மாண்புடையவராவர்; அல்லவர் மாண்பிலர் என்றான் - அல்லாதவர் மாட்சியில்லாதவரே என்றான். ஆண்தகை: வீரம் பொருந்தியவன் (இங்கு மாவலி). தனக்குத் தீங்கு வருவது கண்டும் மேற்கொண்ட செயலில் ஊக்கமுடையவன் என்பதைக் குறிக்கும். வேண்டினர்: வேண்டி வந்த இரவலர். வேட்கை: விருப்பம். நீண்ட கை: கொடையில் நிண்ட கை; (தருகை நீண்ட கை). ‘நின்னுழை’ இதில் ‘உழை’ ஏழனுருபு. வீசுதல்: வழங்குதல். மாவலி அவ்வாறு கூற. வாமனன். வேண்டிவந்து கேட்பவர்களின் விருப்பத்துக்கும் மிகுதியாக வழங்கும் நீண்ட கையுடையவனே! உன்னிடம் வந்ததடைந்தவர்கள் மாண்புடையர். அல்லாதவர்கள் மாண்பில்லார் என்று பாராட்டினான் என்பது கருத்து. 23 |