பக்கம் எண் :

  வேள்விப் படலம்265

கொண்டல் நிறக் குறள் என்பது  கொள்ளேல்  -  (இதனை)  மேகம்
போன்ற  நிறமுடைய  குறள்  வடிவம் என நினைக்காதே;  அண்டமும்
முற்றும்  அகண்டமும்  
- இந்தப் பூமியையும் அதனைச்   சூழ்ந்துள்ள
பேரண்டங்களையும்;  மேல் நாள் உண்டவன்  ஆம்  -   முன் ஒரு
காலத்திலே உண்டவனாகிய திருமாலே ஆகும்; இது உணர்ந்து  கொள்
என்றான்
- இதை அறிந்து கொள்வாய் என்று கூறினான்.

திறம்:   உணர்ச்சித் திறம். கைதவம்: பொய்மை. கொண்டல்: மேகம்.
குறள்:  குறுகிய  வடிவம்.  கொள்ளேல்: கொள்ளாதே. எதிர்மறை ஏவல்
வினைமுற்று.  முற்றுதல்:   சூழ்தல்.   அல்லது  வளைதல். கண்டறிந்து:
ஆராய்ந்து   உணர்ந்த   போது.    அண்டம்:   உலகம்.  அகண்டம்:
பேரண்டம்.

அசுர   குருவாகிய    சுக்கிரன்.    மாவலியை    நோக்கி.   ஐய!
ஆராய்ந்துணர்ந்தல்   இந்த   வடிவம்  வஞ்சகம்;    பொய்மையானது.
கொண்டல்  நிறத்துக்  குறள் வடிவம் என்று எண்ணாதே.  அண்டமும்
அகண்டமும்  உண்டவனான  திருமாலே  என்பதைத்   தெரிந்துகொள்
என்றான் என்பது கருத்து.                                  25
 

419.‘’நினைக்கிலை; என் கை நிமிர்ந்திட வந்து.
தனக்கு இயலாவகை தாழ்வது. தாழ்வு இல்
கனக் கரியானது கைத்தலம் என்னின்.
எனக்கு இதன்மேல் நலம் யாதுகொல்?’’ என்றான்.

 

நினைக்கிலை   -   சுக்கிரனே!    நீ    நினைத்துப்    பார்த்துக்
கூறினாயில்லை; என்  கை  நிமிர்ந்திட  -  என்னுடைய கை மேலாக
நிமிர்ந்து நிற்க;  தனக்கு  இயலா  வகை  வந்து  தாழ்வது  - தனது
தன்மைக்குப்  பொருந்தாத  விதத்தில்  தானே வந்து என் முன் தாழ்ந்து
நிற்பது; தாழ்வு  இல்  கனக்  கரியானது  கைத்தலம்  என்னின்  -
எவ்விதத்திலும்   தாழ்வில்லாத  மேகம் போன்ற கரிய நிறத்தை உடைய
திருமாலின்  கை  என்றால்;  எனக்கு  இதன்மேல்  நலம்  - எனக்கு
இதைவிட  மேலான நன்மை; யாது கொல் என்றான் - ஏது இருக்கிறது
என்று மாவலி கூறினான்.

நினைக்கிலை:  நினைத்துப்  பார்த்துச்  சொல்லவில்லை.   நிமிர்ந்து:
ஓங்கி.  மேலாக  ‘இயலா  வகை’  இதில்   ‘இயலா’ என்பது ஈறுகெட்ட
எதிர்மறைப்   பெயரெச்சம்.  ‘தாழ்வது......கைத்தலம்’   என்று   முடிக்க.
கனம்:  மேகம்.  யாது:  எது. கைத்தலம். கை; இங்கு   உள்ளங்கையைக்
குறித்து  நின்றது.  யாசிப்பவர் கையை விரித்து ஏற்றல்   இயல்பாதலின்
என்க. மேல்நலம்: மேலான நன்மை. யாது கொல் இதில்  ‘கொல்’  எதிர்
மறைப் பொருளை உணர்த்தி நின்றது.

என்கை     உயர்ந்து மேலே நிற்க. தானே வந்து என்முன் தாழ்ந்து
நிற்பது  -  தனக்குப்  பொருந்தாத  வகையிலே.   வாமனனாக   வந்த
திருமாலின் கை என்றால் இதைவிட மேலான நன்மை  எது  இருக்கிறது
என்றான். மாவலி என்பது கருத்து.                             26