பயந்தவர்களும் இகழ் குறளன் - பெற்றவரும் இகழும்படியான குறுகிய வடிவு கொண்ட வாமன மூர்த்தி; எதிர்பார்த்து வியந்தவர் - எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்; வெருக்கொள - அஞ்சும்படியாக; உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப - அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மேலோருக்குச் செய்த உதவி சிறந்து விளங்குவதுபோல; விசும்பின் ஓங்கினான் - வானத்தின் அளவுக்கு வளர்ந்து நின்றான். கயம்: குளம். நறும்புனல்: தெளிந்து குளிர்ந்துள்ள நீராம். உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து என்ற குறட்கருத்துத் தோன்ற. உயர்ந்தவருக்கு உதவிய உதவி சிறந்து விளங்குவது போல. வாமன மூர்த்தி வானுற ஓங்கி. வளர்ந்து நின்றான் என்பது கருத்து. பயந்தவர்: பெற்றோர் (தாய். தந்தையர்). வியத்தல்: ஆச்சரியபடுதல் வெருக்கொள: அச்சமுற. 34 |