குளங்கள் - (அந்த நாட்டிலுள்ள) தடாகங்கள்; மெல்லியலார் நெடுங்கண் - மென்மைத் தன்மையுள்ள பெண்களின் கண்களாகிய; வாள்படை உறைபுக - வாள்கள் (இமைகளாகிய) நீண்ட கண்களாகிய; வாள் உறைபுக - வாங்கள் (இமைகளாகிய) உறைக்குள்ளே புகும்படி (கண்களை இறுக மூடிக்கொண்டு); படர் புனல் மூழ்கி - பரந்த நீரி்லே இறங்கிக் குளித்து (அந்த நீரைவிட்டு எழுதல்); முன்கடல் கடைய - முன்பு திருப்பாற்கடலைக் கடைய; செழுந்திரு எழும்படி - (அங்கிருந்து) அழகுமிக்க இலக்குமி எழுந்த தன்மையை; காட்டி- தோற்றுவிக்கும்; மிடையும் வெள்வளை - நீரோடு மகளிர் நெருக்கமாக அணிந்துள்ள வளையல்கள்; புள்ளொடும் ஒலிப்ப - நீர்ப்பறவைகளோடு சமமாக ஒலிக்கும்படி; குடைய - நீரிலே மூழ்கித் திளைக்க; வண்டு இனம் - வண்டுகள்; கடிமலர் குடைவன - நறுமணமுள்ள பூக்களைக் குடைந்து மதுவைக் குடித்துக் களிக்கும். மகளிரும் திருமகளும்: மகளிர் தம் வளையல்கள் ஒலிக்கக் குளத்தில் மூழ்கி எழுகின்றார்கள். அது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடையும்பொழுது அக் கடலிலிருந்து திருமகள் மேலே எழுவதுபோல் உள்ளது. இதில் காட்சி அணி அமைந்துள்ளது. பாற்கடல் குளத்துக்கும். திருமகள் மிதிலை நாட்டுப் பெண்களுக்கும் உவமையாகும். உருவக அணி: கண்களை வாளாகவும். இமைகளை உறையாகவும் உருவகம் செய்துள்ளார். நயம்: மெல்லியலார் நீர் குடைகின்றார்: வண்டுகள் மலர் குடைகின்றன. 12 மிதிலை நகரின் மதிற்புறத்தே அகலிகை கல்லாய்க் கிடந்த மேட்டைக் காணல் |