பக்கம் எண் :

294பால காண்டம்  

இனைய  நாட்டினில் -  இத்தகைய  மிதிலை  நாட்டிலே;  இனிது
சென்று  
-  இனிய  மகிழ்ச்சியோடு அடைந்து; இஞ்சி சூழ் மிதிலை -
மதில்களால்      சூழப்பட்டுள்ள     மிதிலை    நகரை;    புனையும்
அலங்கரிக்கின்ற;   நீள்கொடிப்    புரிசையின்      -    உயர்ந்த
கொடிகளையுடைய புறமதிலின்; புறத்து வந்து இறுத்தார் - வெளியிலே
வந்து  தங்கினார்கள்;  மனையின்  மாட்சியை  -  (அவ்வாறு  தங்கி)
இல்லறத்திற்குச்    சிறப்பான    கற்பினை;    அழித்து    இழி   -
அழியச்செய்ததால்   இழிவை   அடைந்தன;   மாதவப்   பன்னி  -
பெருந்தவத்தனான     கௌதமரின்    மனைவியான    அகலிகையின்;
கனையும்  மேடு  உயர்  -
(சாப உருவில்) அடர்ந்த மேடாக உயர்ந்து
தோன்றுகின்ற;   கருங்கல்   -   கருங்கல்லாகக்  (கிடப்பதனை);  ஓர்
வெள்ளிடைக் -
ஒரு வெட்டவெளியிலே; கண்டார் - கண்டார்கள்.  

விசுவாமித்திரன்  முதலிய மூவரும் மிதிலையின் மதிலுக்குப் புறத்தே
தங்கினர்.  அப்பொழுது  கௌதம  முனிவன் மனைவியான  அகலிகை
அம்முனிவனின்    சாபத்தால்   கல்லாய்க்    கிடக்கும்    இடத்தைப்
பார்த்தார்கள். பன்னி: பத்நி(மனைவி) என்னும்  வடசொல்  பன்னி என
மருவியது.                                                13

          இராமனது திருவடி பட அகலிகை முன்னை வடிவம் பெறல்.
    

465.கண்ட கல்மிசைக் காகுத்தன்
   கழல் - துகள் கதுவ.-
உண்ட பேதைமை மயக்கு அற
   வேறுபட்டு. உருவம்
கொண்டு. மெய் உணர்பவன்
   கழல் கூடியது ஒப்ப.-
பண்டை வண்ணமாய் நின்றனள்;
   மா முனி பணிப்பான்;
 
  

கண்ட  கல்மிசை  - (அவ்வாறு) கண்ட கல்லின்மேலே; காகுத்தன்
கழல் துகள்
- இராமனது திருவடித் துகள்; கதுவ - பட்டதால்; உண்ட
பேதைமை
- (தான்) மனத்திற் கொண்டுள்ள அறியாமையாகிய;  மயக்கு
அற
- இருள் மயக்கம் நீங்குமாறு; மெய் உணர்பவன் -  உண்மையான
தத்துவ  ஞானம்  பெற்றவன்;  வேறுபட்டு  - தனது  அஞ்ஞானமாகிய
அறியாமை  நிலை  மாறி; உருவம் கொண்டு - உண்மை வடிவம்  (புது
ஞானஸ்வரூபி)   அடைந்து;   கழல்   கூடியது   ஒப்ப  -  பரமனது
திருவடிகளை  அடைவதைப்  போல; பண்டை வண்ணமாய் -  (அந்த
அகலிகை) முன்னைய வடிவத்தோடு; நி்ன்றனள் -  எழுந்து  நின்றனள்;
மா   முனி   பணிப்பான்   
-  (அதனைக்  கண்ட)  விசுவாமித்திரன்
இராமனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்.