மா இரு விசும்பின் - மிகப் பெரிய ஆகாயத்திலிருந்து; கங்கை மண்மிசை - கங்கா நதியை இப்பூமிக்கு; கொணர்ந்தோன் மைந்த - கொண்டு வந்த பகீரதன் என்னும் பேரரசன் (குலத்தில் பிறந்த) மைந்தனே!; மேயின உவகையோடு - பொருந்தின மகிழ்ச்சியோடு; மின்னென - மின்னல்கொடிபோல; ஒதுங்கி நின்றாள் - ஒருபக்கத்தே (நாணத்தால்) ஒதுங்கி நின்ற இவள்; தீவினை - (மற்றொருவன் மனைவியைச் சேர்தலாகிய) கொடுந்தொழிலை; நயந்து செய்த - விரும்பிச் செய்த; தேவர்கோன் தனக்கு - தேவர்கள் தலைவனான இந்திரனுக்கு; செங்கண் ஆயிரம் - சிவந்த ஆயிரம் கண்களை; அளித்தோன் பன்னி - கொடுத்த கௌதம முனிவனுடைய பத்தினியான; அகலிகை ஆகும் - அகலிகை ஆவாள் என்றான். அகலிகை: தன் சிலை வடிவம் நீங்கி பெண்வடிவு பெற்று மகிழ்ச்சியோடு நாணத்தால் ஒதுங்கி நிற்பவளே. கௌதம முனிவனின் மனைவியான அகலிகையாவாள் இந்திரன் ஆயிரம் கண்கள் பெற்றமை: இந்திரன் மாற்றான் மனைவியைச் சேர்தலாகிய கொடுஞ்செயலை விரும்பிச் செய்ய அதன் |