ஓங்கா நின்ற- வளர்கின்ற; இருள் ஆய் - இருளின் வடிவமாய்; வந்து - வந்து; உலகை விழுங்கி - உலக முழுவதையும் கவர்ந்து; மேன் மேலும் - மேலும் மேலும்; வீங்கா நின்ற - வளாச்சி அடையும்; கரு நெருப்பின் இடையே - கரிய தீயின் இடையே; எழுந்த - தோன்றும்; வெண்நெருப்பே - வெண்ணிறமுள்ள நெருப்பே; நீங்காமாயை - நீங்காத மாயையை; அவர் தமக்கு - செய்து வரும் அந்த உத்தமனுக்கு; நிறமே தோற்று - நிறத்தால் தோல்வியுற்று; புறமே போய் - (உலகிற்குப்) புறம்பாகச் சென்று; ஏங்காக் கிடக்கும் - ஏங்கிக் கிடக்கின்ற; எறி கடற்கும் - அலை வீசுகிற கடலுக்கும்; எனக்கும் - (காம வேதனையால் வருந்தும்) எனக்கும்; கொடியயை ஆனாயே - (நீ) கொடுஞ்சொல் புரிவாய் ஆயினை பிரிந்தவர்களுக்குத் தென்றல். சந்திரன் ஆகியவை காதல் நோயை மிகுவிக்கும் பொருள்கள் துயரத்தை விளைத்தலால் அன்னவர் அவற்றை வெறுத்துக் கூறுதல் இயற்கை. சந்திரன்: தன் காம வேதனையை மிகச் செய்தும். கடலைப் பொங்கச் செய்தும் அலைத்தலால் சந்திரனை நோக்கிக் ‘கடற்கும்’ எனக்கும் கொடியை ஆனாயே’ என்றாள் சீதை. ஏங்காக் கிடத்தல்: (சிலேடையாக) ஒலித்தல் ஏங்கிக் கிடத்தல். ‘மாயை யவர்தமக்கு நிறமே தோற்று’ - கடலின் கரு நிறத்தைக் காட்டிலும் இராமனது திருமேனி நிறமே மிகக் கறுத்துள்ளது. 76 |