பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்355

பிடியின் மென்நடைப் பெண்ணொடு; என்றால். எனைச்
சுடுதியோ? - கடல் தோன்றிய திங்களே!
 

கடல் தோன்றிய- கடலிலிருந்து உதித்த; திங்களே - சந்திரனே!;
நீ கொடியை அல்லை  
- நீ  இயற்கையில்  கொடியவன்  அல்லன்;
யாரையும் கொல்கிலாய்  
-  (அது  எவ்வாறு  எனில்)  உலகத்தில்
எவரையும்  கொல்கின்றாய் இல்லை; வடு இல் - (தவிர நீ) குற்றமற்ற;
இன்   அமுதத்தொடும் 
-  இனிய    அமுதத்துடனும்;  பிடியின்
மென்னடை
- பெண்யானை  போன்ற நடையுடைய; பெண்ணொடும்
- திருமகளுடனும்; வந்தனை  - பிறந்தாய்;  என்றால்  -  இவ்வாறு
இருப்பதால்; எனைச் சுடுதியோ - என்னைச்சுடுவதும் தக்கதோ?   

‘சந்திரனே!     நீ     எல்லோரையும்    கொல்லும்  தன்மையை
இயற்கையாகப்    பெற்றாய்    இல்லை;   ?ஏனெனில்   கடலினின்று
தோன்றியவன்  ஆதலால்  இயல்பாகவே  குளிர்ச்சி  பொருந்தியவன்;
அமுதத்தோடு   பிறந்தவனாதலால்   பெண்ணிடம்  அன்பு  வைக்கத்
தக்கவன்.  அவ்வாறு  இருக்க  நீ பெண்ணாகிய என்னை வருத்துவது
முறையோ’ என்கிறாள் சீதை.                                77  

                            காதல் நோயால் சீதை பட்ட துன்பம்
 

557.மீது மொய்த்து எழு வெண் நிலவின் கதிர்
மோது மத்திகை மென் முலைமேல் பட.
ஓதிமப் பெடை வெங் கனல் உற்றென.
போது மொய்த்த அமளிப் புரண்டான் அரோ!
 

மீது - வானில்; மொய்த்து எழு - நெருங்கி எழுகின்ற; நிலவின்
கதிர்
- வெண்ணிலாவின் கதிர்களாகிய; மோது மத்திகை - அடிக்கும்
சம்மட்டி; மென்முலை  மேல்  பட-  தன் மெல்லிய தனங்கள் மேல்
படுதலால்;  ஒதிமப் பெடை -  (சீதை) பெண் அன்னம்; வெம்கனல்
உற்றென 
-  கொடிய   நெருப்பிலே  அகப்பட்டுதுபோல;   போது
மொய்த்த
-  தாமரை  மலர்கள்  நிறைந்த;  அமளி   புரண்டாள் -
படுக்கையில் விழுந்து புரண்டாள்.

சந்திரனைச்  சம்மட்டி என்றதால் மென்முலை அதை எறிதற்குரிய
பட்டடை ஆயிற்று. போது மொய்த்த அமளி அவளுக்குத் தீ பரப்பிய
குண்டமாயிற்று.  தற்குறிப்பேற்றவணி.  தாமரை  மலர்ப்   படுக்கையில்
சீதை  புரண்டதற்கு  ஒப்புமை அமையப் பெடையன்னம்  நெருப்பிலே
பொருந்தியது போலும் என்றார்.                             78