நிக்கமின்றி - நீங்குதல் இல்லாமல்; நிமிர்ந்த - (எங்கும்) பரவிய; நிலாக்கதிர் - கந்திரனின் ஒளிக்கதிர்; தாக்க - தாக்குவதால்; வெந்து - (சீதை) உடல் வெதும்பி; தளர்ந்து - (மனம்) தளர்ந்து; சரிந்தனள்- கீழே விழுந்தாள்; சேக்கை ஆகி - (முன்பு அவளுக்கு) தங்கும் இடமாகி; மலர்ந்த - விரிந்த; செந்தாமரைப் பூக்கள் - செந்தாமரை மலர்கள் (இரவில் அச்சீதைக்குப் படுக்கை மெத்தையாய்); பட்டது - அவள் புரண்டபோது அவளது காமச் சூட்டினால் அடைந்த நிலைமகளை; அப் பூவையும் - அச் சீதையும்; பட்டனள் - அடையலானாள்; முன்பு சீதைக்குத் தங்கும் இடமாகி மலர்ந்த செந்தாமரை இப்பொழுது பள்ளியணையாய்க் காமவேதனையால் புரண்டபோது துன்பம் தந்தது என்க. தாமரைப் பூக்கள் பட்ட தன்மை: கூம்பிச் சாம்பிப் பொலிவிழந்து வாடி ஒடுங்கியமை. பூவை: உவமையாகுபெயர். 79 |