மேனியில் - (சீதையின்) திருமேனியில்; காய் - எரியும்; எரி - காமத் தீயினால்; தாது உகு வீ - மகரந்தப் பொடிகள் சிந்தப்பெற்ற மலர்களைக் கொண்டும்; அரித்தளிர் - மெல்லிய தளிர்களைக்கொண்டும்; மெல் அணை - (அமைக்கப்பட்ட) மெல்லிய அவளுடைய படுக்கை மெத்தைகள்; கரியக் கரிய - கருகிக்கொண்டேயிருக்க; தாயரின் பரி சேடியர் - தன்னைப் பெற்ற தாயரைவிட மிக்க அன்பு காட்டும் (சீதையின்) தோழியர்; ஆயிரத்தின் இரட்டி - இரண்டாயிரம் படுக்கை மெத்தைகளை; கெணர்ந்து - (ஒன்றன்பின் ஒன்றாகக்) கொண்டு வந்து; அடுக்கினார் - மேன்மேல் அடுக்கி அமைத்தார்கள். தோழியர் அன்போடு படுக்கைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தார்கள். ஆயிரத்து இரட்டி மிகப்பல. அரித்தளிர் அடர்த்தியை உடைய தளிர். பொன்னிறமான தளிர். ஒளியுள்ள தளிர். 81 |