பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்359

564.

வந்து எதிர்ந்த முனிவனை வள்ளலும்
சிந்தை ஆர வணங்கலும். சென்று எதிர்.
அந்தம் இல் குணத்தான் நெடிது ஆசிகள்
தந்து. கோசிகன்தன் மருங்கு எய்தினான்.
 

வந்து  எதிர்ந்த  -  (இங்ஙனம்)   வந்து  தோன்றிய; முனிவனை
- அம் முனிவனை; வள்ளலும் - வரையாது அருள் செய்யும் இராமனும்;
சிந்தை  ஆர  
-  மனம்   மகிழ;  வணங்கலும்  -   அடி  வீழ்ந்து
வணங்கியபின்;   அந்தம்    இல்    குணத்தான்  -   எல்லையற்ற
நற்குணங்கள் வாய்ந்த  அச்  சதானந்த  முனிவன்;  ஆசிகள்  நெடிது
தந்து
- (இராமனுக்கு)   ஆசி  மொழிகள்   மிகுதியும்  கூறி;  சென்று
எதிர்
-  (தன்னை)   எதிர்கொண்ட;    கோசிகன்   தன் மருங்கு -
விசுவாமித்திரன் அருகில்; எய்தினான் - அடைந்தான்.

             வள்ளல்: அகலிகைக்கு அருள் செய்தமை கருதியது.  85
 

565.

கோதமன் தரு கோ முனி கோசிக
மாதவன்தனை மா முகம் நோக்கி. ‘இப்
போது நீ இவண் போத. இப் பூதலம்
ஏது செய்த தவம்?’ என்று இய்மபினான்.*
 

கோதமன் தரு - கௌதம முனிவன் பெற்று அருளிய;  கோ முனி
- முனிவர்  தலைவனான சதானந்தன்  மாதவன்  கோசிகன்   தனை -
பெருந்  தவத்தையுடைய  கௌசிக  முனிவனது  மாமுகம்   நோக்கி -
திருமுகத்தைப்  பார்த்து  இப்போது நீ இவண் - இப்பொழுது  நீங்கள்
இவ்விடம்  போத  -  வருமாறு  இப் பூதலம் - இந்த  மிதிலை நகரம்;
செய்த   தவம் 
-  பண்ணிய   தவம்;  ஏது  -  யாதோ;   என்று 
இயம்பினான்
- என்று உபசார மொழிகளைக் கூறலானான்.         86

                    விசுவாமித்திரன் இராமனது பெருமை பேசுதல்
 

566.

பூந் தண் சேக்கைப் புனிதனையே பொரு
ஏய்ந்த கேண்மைச் சதானந்தன் என்று உரை
வாய்ந்த மா தவன் மா முகம் நோக்கி. நூல்
தோய்ந்த சிந்தைக் கௌசிகன் சொல்லுவான்:*
 

தண்     பூச் சேக்கை  - குளிர்ந்த  தாமரை ஆசனத்தையுடைய;
புனிதனையே
-  தூய  குணமுள்ள   பிரமனை;   பொரு  ஏய்ந்த -
ஒத்துள்ளவனும்; கேண்மை  -   எல்லரிடத்திலும்  நட்புடையவனுமான;
சதானந்தன்  என்று   உரை  
-  சதானந்தன்   என்று   சிறப்பித்துச்
சொல்லப்படுகின்ற; வாய்ந்த மா தவன் - பெருமுனிவனது; மாமுகம்