வடித்த மாதவ - தெளிந்து செய்த பெரிய தவமுனிவரே; கேட்டி - (நான்கூறுவதைக்) கேட்பீராக; இவ்வள்ளல்தான் - இந்த வள்ளலான இராமன்; இடித்த வெம்குரல் - இடிபோன்ற குரலுடைய; தாடகை யாக்கையும் - தாடகை என்னும் அரக்கியின் உடம்பையும்; என் வேள்வியும் - என் யாகத்தையும்; நின் அன்னை சாபமும் - உன் தாயான அகலிகையின் சாபத்தையும்; அடுத்து முடித்து - ஒன்றன்பின் ஒன்றாக முடித்து; என் நெஞ்சத்து - என் நெஞ்சில் கிடந்த; இடர்முடித்தான் - துயரங்களைத் தீர்த்து வைத்தவன் ஆவான். மூவகை முடித்தல்களைச் செய்தவன் இராமன்: 1. தாடகையைக் கொன்று முடித்தல். 2. வேள்வியை முடித்தது. 3. அகலிகையின் சாபம் ஒழித்து நீக்கியது. முடித்தல் என்ற சொல் பல பொருளில் வந்தது. சொற் பின்வரு நிலையணி. 88 சதானந்தர் கோசிகனைப் பாராட்டுதல் |