லக்குவர்க்கு; அரிது - செய்யமுடியாத அருஞ்செயல்; யாது - என்ன இருக்கின்றது (ஒன்றுமில்லை); எனவும் விளம்பி - என்றும் கூறி; மேல் - மேலும்; தபோதனன்: யாவரும் செல்வத்தை விரும்பிப் பாதுகாப்பது போலத் தன் தவத்தை விரும்பிப் பாதுகாக்கும் முனிவன். 89 இராமனுக்குச் சதானந்தர் உரைத்த விசுவாமித்திரர் வரலாறு. |
| 569. | எள் இல் பூவையும். இந்திர நீலமும். அள்ளல் வேலையும். அம்புத சாலமும். விள்ளும் வீயுடைப் பானலும். மேவும் மெய் வள்ளல்தன்னை மதிமுகம் நோக்கியே.* |
எள் இல் பூவையும் - பழிப்பதற்கு இடமில்லாத காயாமலரையும்; இந்திர நீலமும் - இந்திர நீல இரத்தினத்தையும்; அள்ளல் வேலையும் - சேறுள்ள கடலையும்; அம்புத சாலமும் - மேகக் கூட்டத்தையும்; விள்ளும் வீ உடை - மலர்ந்த பூக்களைக் கொண்ட; பானலும் - நீலோற்பலத்தையும்; மேவும் - உவமையாகப் பொருந்திய; மெய் - திருமேனியுடைய; வள்ளல்தன்னை - இராமனது; மதிமுகம் நோக்கி - சந்திரன் போன்ற திருமுகத்தைப் பார்த்து. 90 விசுவாமித்திரன் அரசனாய் ஆண்டமை |
570. | ‘நறு மலர்த் தொடை நாயக! நான் உனக்கு அறிவுறுத்துவென். கேள்; இவ் அருந் தவன் இறை எனப் புவிக்கு ஈறு இல் பல் ஆண்டு எலாம் முறையினின் புரந்தே அருள் முற்றினான். |
நறுமலர்த் தொடை- மணமுள்ள மலர்களால் ஆகிய மாலையை அணிந்த; நாயக - தலைவனே! நான் உனக்கு - உனக்கு நான்; அறிவுறுத்துவென் - (ஒரு செய்தியை) தெரிவிக்கிறேன்; கேள் - (அதனை) கேட்பாயாக!; இவ் அருந்தவன் -இந்த அரிய தவமுனிவனான கௌசிகன்; புவிக்கு இறையென - (முதலில்) நிலவுலகத்திற்கு ஓர் அரசனாகி; ஈறு இல் - எல்லையில்லாத; பல் ஆண்டு எலாம் - பல ஆண்டுகள் அளவும்; முறையினின் புரந்து - அரச நீதிப்படி பாதுகாத்து; அருள் முற்றினான் - (உயிர்களிடம்) கருணை நிரம்பி இருந்தான். 91 வேட்டைமேல் காடு சென்ற அரசன் வசிட்டனைச் சார்தல் |
571. | ‘அரசின் வைகி அறனின் அமைந்துழி. விரசு கானிடைச் சென்றனன். வேட்டைமேல்; |