நிற்கு-உனக்கு; இது - இப் பசு; தகுவது அன்று -தகுதியுடையது அன்று; ஆல் - (அதனால்); நீடு அரும் - சிறப்பு மிக்க; சுரபி தன்னை - இக் காமதேனுவை; எற்கு அருள் - எனக்குக கொடுத்தருளுக; என்றலோடும் - (என்று கௌசிகன்) சொன்ன அளவில்; யாதும் இயம்பலம் - வசிட்டன் (சிறிது நேரம்) ஒன்றும் கூறாதவனாய்; பின்னர் - பின்பு; கொன் கொள் - (பகைவர்க்கு) அம்சம்தரும்; வேல் உழவ - வேற்படையுள்ள அரசே; வற்கலை உடையென் - மரவுரியை ஆடையாக உடைய முனிவனான; யானோ வழங்கலென் - நானோ (இதனை உமக்குக்) கொடுக்கும் உரிமை உடையவன் அல்லன்; வருவது ஆகின் - (அப் பசு உம்மிடம்) வருவதனால்; நீயே கொண்டு - நீரே அழைத்துக் கொண்டு; அகல்க - செல்வீராக; என்று கூற - என்று கூறிய அளவில். வற்கலை உடையென் யானோ வழங்கலென் - முனிவர்க்கு அரசர் பசு முதலிய பொருள்களைக் கொடுத்திடுவது மரபேயொழிய முனிவர் அரசர்க்குக் கோதானம் செய்வது தக்கது அன்று என்ற கருத்தும் குறிப்பாக உணரப்படுகிறது. சொல் கொள்வேல் - கொலைத் தொழிலைக் கொண்ட வேல். கொல்லனது உலைக் களத்தில் வடிக்கப்பட்ட வேல். வேல் உழவன்: பகைவரது உடம்பாகிய விளைநிலத்தைத் தனது வேலாகிய கலப்பையைக் கொண்டு உழுது போராகிய பயிரை வளர்த்து வெற்றியாகிய பயனை விளை |