பக்கம் எண் :

366பால காண்டம்  

யானே  கொடுத்திலென் - (உனது உடன்பாடு இல்லாமல் உன்னை)
நானே கௌசிகனுக்குக்  கொடுக்கவில்லை;  இக் குடை கெழு- வெற்றிக்
குடையுடைய; வேந்தன் தானே  -   அவ்வரசனே (உன்னை); பிடித்து
அகல்வுற்றது
-  பிடித்துக் கொண்டு   போகத் தொடங்கிய செயல் இது;
என்ன
-என்று முனிவன் விடை கூற;  (அது கேட்டு); பெருஞ் சினம்
-  
(அப்பசு)  பெருங்கோபம்;   கதுவும்   நெஞ்சோடு  -  கொண்ட
மனத்தோடு;  இடித்து  எழும்  முரசம்  -  இடியை  ஒத்து  எழுகிற
ஓசையுடைய முரசங்களை;   வேந்தன்   சேனையை   -   கொண்ட
இவ்வரசனது படைகளை;  யானே  இன்று  முடிக்குவென்  -  நானே
இன்று  அழித்துவிடுவேன்; காண்டி என்னா - (அதைக்)  காண்பாயாக
என்று சபதமிட்டு; அன்றே மொய்ம்மயிர்சிலிர்த்தது -  அப்பொழுதே
அடர்ந்த தன் உடம்பின் மயிர்களைச் சிலிர்த்தது.
 

அகல்வுற்றது:     தொழிற்பெயர் ‘வருவதாகில் கோவைக் கொண்டு
அகல்க’  என்றதால்  ‘நான்  கொடுக்கவில்லை;  வேந்தனே உன்னைக்
கொண்டு அகல்வுற்றான்’ என்பது பெறப்பட்டது.                 98
 
  

578.

‘பப்பரர் யவனர் சீனர்
   சோனகர் முதல பல்லோர்
கைப்படை அதனினோடும்
   கபிலைமாட்டு உதித்து. வேந்தன்
துப்புடைச் சேனை யாவும்
   தொலைவுறத் துணித்தலோடும்.
வெப்புடைக் கொடிய மன்னன்
   தனயர்கள் வெகுண்டு மிக்கார்.
 

(அங்ஙனம்     காமதேனு  மயிரைச்  சிலிர்த்தவுடனே) பப்பரர்-
பப்பரர்களும்; யவனர் - யவன தேசத்தார்களும்; சீனர் -  சீனர்களும்;
சோனகர் 
- சோனகர்களும்; முதல - முதலான;  பல்லோர்- மிலேச்ச
வீரர்கள்   பலர்;    கைப்படை    அதனினோடும்   -  கைகளில்
ஆயுதங்களோடும்;  கபிலை மாட்டு உதித்து  -   அப்  பசுவினிடம்
தோன்றி;  வேந்தன்  துப்பு  உடை   அக்  கௌசிக மன்னனுடைய
வலிமையுள்ள; சேனை யாவும் - படைகளையெல்லாம்; தொலைவு உற
-   அழியும்படி;  துணித்தலோடும்   -   கண்ட  துண்டங்களாக்கின
அளவிலே; வெப்பு  உடை - (இயற்கையில்) சினம் கொண்ட; கொடிய
மன்னன்  தனயர்கள்  
-  கொடியவர்களாகிய கௌசிக மன்னனுடைய
மைந்தர்கள்; வெகுண்டு மிக்கார் - கோபித்துத் தாக்கலானார்கள்.

பப்பரம். சீனம். சோனகம் - மிலேச்ச சாதி பேதங்கள் - விளங்காத
வேற்றுமொழிகள் பேசுகின்ற புற நாட்டவர்.                    99