சினம் மிக்க கோசிக குமாரர்கள்; இது - இவ்வாறு பசுவினிடம் மிலேச்சர் தோன்றி நமது சேனையை அழித்தது; சுரபி தன் வலியன்று - காமதேனுவின் வலிமையல்ல; சுருதி நூல் உணர வல்ல - வேதக் கலைகளை அறியவல்ல; வரமுனி - வரம் பெற்ற வசிட்ட முனிவனது; வஞ்சம் என்னா - வஞ்சகச் செயலாகும் என்று சொல்லி; அவன் சிரத்தை - அம் முனிவனது தலையை; இன்னே அரிகுதும் - இப்பொழுதே அறுத்திடுவோம்; என்ன - என்று வீரமொழி கூறி்; பொங்கி சினந்து எழுந்து; அடர்த்தனர் - எதிர்த்து நெருக்கினார்கள்; அடர - அவ்வாறு நெருக்க (அப்போது); அன்னான் - அவ் வசிட்ட முனிவன்; எரி எழ விழித்தலோடும் - தீப்பொறி பறக்கும்படி கண்களால் விழித்துப் பார்த்த அளவிலே; குமரர் எல்லாம் - விசுவாமித்திரன் குமாரர் யாவரும்; இறந்தனர் - மடிந்ததொழிந்தார்கள். 100 விசுவாமித்திரன் வசிட்டன் போர் |