- நீண்ட கொடியமைந்த தன் தேரை; கடாவி - செலுத்தி்; கார்முகம் வளைய வாங்கி - வில்லை நன்கு வளைத்து; கை தொடர் கணையினோடும் - தன் கையிலிருந்து தொடர்ச்சியாக விடப்படும் அம்புகளால்; எய்தனன் - (வசிட்டன்மேல்) எய்யத் தொடங்கினான்; முனியும் - வசிட்ட முனிவனும்; தன் கைத் தண்டினை - தன் கையிலுள்ள; பிரமதண்டத்தை நோக்கி; எதிர்க என்றான் - நீ அந்த ஆயுதங்களை எதிராக ஏற்றிடு என்று நியமித்தான். கணையினோடு: கணையினால்: ஓடு கருவிப் பொருள். வளைய வாங்குதல்: ஒரு பொருட் பன்மொழி. 101 |