வேந்தன் - விசுவாமித்திரன்; படையை - அந்தப் படையை; விட்டனன்- (வசிட்டன்மேல்) ஏவினான்; விண் உளோர் - (அதனைக் கண்ட) தேவர்களும் (இப்படையால்); உலகை எல்லாம் - எல்லா உலகையும்; சுட்டனன் என்ன - எரித்தவன் இவன் என்று; அஞ்சித் துளங்கினர் - பயந்து நடுங்கினார்கள் (ஆயினும்); முனியும் - வசிட்ட முனிவனும்; தோன்றி -எதிரில் வந்து; கிட்டிய படையை - நெருங்கிய அந்த உருத்திரப் படையை; உண்டு - (தானே) உட்கொண்டு; கிளரும் மேனி - (அந்த அத்திர நெருப்பால்) பொலிகின்ற; முட்ட வெம்பொறிகள் - தன் உடம்பிலிருந்து வெப்பமான நெருப்புப் பொறிகள்; சிந்த - வெளிப்பட; கிளர்ந்தனன் - (தன்னைத் தாக்கிய அப்படையின் வலிமை அழியுமாறு செய்து) ஆற்றலால் பொலிவுற்று நின்றான்; பொருபடை முரண் அது - போர் செய்து அழிப்பதற்குரிய உருத்திரப் படையின் அவ்வலிமை; இற்று - (வசிட்டனிடம்) இப்படி ஆயிற்று. சுட்டனன் - தெளிவு குறித்த கால வழுவமைதி. 103
கௌசிகன் தவம் மேற்கொள்ளல் |