பக்கம் எண் :

370பால காண்டம்  

தைச்  செய்ய  நினைத்து; உம்பர்கோன்  - தேவந்திரனது; திசையை
உற்றான்
- திசையான கிழக்குத் திக்கை அடைந்தான்.   

அரசர் ஆற்றலைவிட முனிவர் ஆற்றலே சிறப்புடையது  என்பதை
அறிந்த கௌசிகன் அதைப் பெறக் கருதித் தவம் செய்யச்   சென்றான்.
திறல் - வெற்றி; திறல் வலி - வெற்றிக்குக் காரணமான வலிமை.  104  

                         இந்திரன் அவனது தவத்தைக் கெடுத்தல்
 

584.

‘மாண்ட மா தவத்தோன் செய்த
   வலனையே மனத்தின் எண்ணி.
பூண்ட மா தவத்தன் ஆகி
   அரசர்கோன் பொலியும் நீர்மை
காண்டலும். அமரர் வேந்தன்
   துணுக்குறு கருத்தினோடும்
தூண்டினன். அரம்பைமாருள்
   திலோத்தமை எனும் சொல் மானை.
 

(இவ்வாறு)     அரசர்கோன்  -  அரசர்  தலைவனான கௌசிகன்;
மாண்ட மாதவத்தோன்
- மாட்சிமை பெற்ற மாதவத்தனான வசிட்டன்;
செய்த வலனையே
- பெற்ற வெற்றிச்செயலையே; மனத்தின் எண்ணி
-  மனத்திலே இடைவிடாது சிந்தித்து;- பூண்ட  மா  தவத்தன்  ஆகி -
மேற்கொண்ட   பெருந்தவம்  புரிந்தவனாய்;  பொலியும்  -  திகழும்;
நீர்மை  
-   தன்மையை;   காண்டலும்  -   நோக்கிய   அளவில்;
அமரர்வேந்தன்  
-  தேவர்  தலைவனான  இந்திரன்; துணுக்கு உறு
- அச்சம்  மிகுந்த; கருத்தினோடும் - கருத்தோடு; அரம்பை மாருள்
- அரம்பை முதலிய  தெய்வப்  பெண்களுள்; திலோத்தமை எனும் -
திலோத்தமை  என்ற; சொல்  மானை - புகழ்கொண்ட மான் போன்ற
பெண்ணை;  தூண்டினான் - (அக் கௌகினன் தவத்தைக்  கலைக்கும்
பொருட்டு) ஏவினான்.

சொல்:     புகழ். இந்திரன் துணுக்குற்றதன் காரணம்  பெருந்தவம்
செய்பவரின்  கபாலத்திலிருந்து ஒருவகை நெருப்பு மேல்  எழுந்த தன்
பொன்னுலகைச்  சுட்டெரிக்கும்  என்கிற  அச்சம்.  மாண்ட  - மாண்
என்ற    வினைமுதல்   அடியாக   வந்த   பெயரெச்சம்.   ‘மாண்ட
என்மனைவியொடு மக்களும் நிரம்பினர்’ (புறம்.191).              105
   

585.

‘அன்னவன் மேனி காணா.
   அனங்க வேள் சரங்கள் பாய.
தன் உணர்வு அழிந்து காதற்
   சலதியின் அழுந்தி. வேந்தன்