பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்371

பன்ன அரும் பகல் தீர்வுற்று.
   பரிணிதர் தெரித்த நூலில்
நல் நயம் உணர்ந்தோன் ஆகி.
   நஞ்சு எனக் கனன்று. நக்கான்.
 

வேந்தன்  - அரசனான கௌசிகன்; அன்னவள் மேனி காணா -
திலோத்தமையின்   மேனியழகைக்   கண்டு;   அனங்க   வேள்  -
மன்மதனுடைய;   ரங்கள்  பாய  -  அம்புகள்  (தன்மேற்)  பட்டுத்
தைத்தலால்; தன் உணர்வு அழிந்து -தனது நல்லறிவு கெட்டு; காதல்
சலதியின்  அழுந்தி
- அவளது  காமக் கடலிலே மூழ்கி; பன்னரும்
பகல்  தீர்வுற்று  .  
சொல்ல   முடியாத  பல  நாட்கள்  அதிலே
கழியப் பெற்று;   பரிணிதர்  தெரிந்த நூலின் - (பின்பு) நல்லறிஞர்
ஆராய்ந்து   கூறின   கலைகளின்;   நல்   நயம்  உணர்ந்தோன்
ஆகி   -  
சிறந்த பொருள்களை      உணர்ந்தவனாகி;    நஞ்சு
எனக்    கனன்று   - 
(அச்சிற்றின்பத்தை)  நஞ்சுபோல் வெறுத்து;
நக்கான் -
நகைத்தான்.   

தனது     தவம் குலையக் காரணமான திலோத்தமையை எண்ணிச்
சினமும்   தனது   செய்கையில்   வெறுப்பும்  கொண்டு  கௌசிகன்
சிரித்தான்.  சிரித்தற்குக்  காரணம்  -  செய்யக் கூடாத ஒழுக்கத்தைச்
செய்து விட்டதால். பரிணிதர் - அறிவின் பக்குவம் முதிர்ந்தவர்.   106

                 விசுவாமித்திரன் தென்திசை சென்று தவம் செய்தல்
 

586.‘’விண் முழுதுஆளி செய்த
   வினை’’ என வெகுண்டு. ‘’நீபோய்.
மண்மகள் ஆதி’’ என்று.
   மடவரல்தன்னை ஏவி.
கண் மலர் சிவப்ப. உள்ளம்
   கறுப்புறக் கடிதின் ஏகி.
எண்மரின் வலியன் ஆய
   யமன்திசைதன்னை உற்றான்.
 

(இவ்வாறு     தன்  தவம்  அழிந்தது)  விண்  முழுது  ஆளி  -
தேவலோகம்  முழுவதும்  ஆட்சி  புரியும் இந்திரனது; செய்த வினை
என  
-  வஞ்சனைச் செயலாகும் என்று அறிந்து; வெகுண்டு - சினம்
கொண்டு;  நீ  போய்  மண்மகள்  ஆதீ  - நீ  நிலவுலகம் சென்று
மானிடகப்  பெண்ணாகப் பிறப்பாயாக;  என்று  மடவரல் தன்னை -
என்று  அத்திலோத்தமையை;  ஏவி.  சபித்து விட்டு;  - கண்மலர்
சிவப்ப
-   (சினத்தால்)   தாமரை   போன்ற   கண்கள்  செந்நிறம்
அடையவும்;  உள்ளம்   கறுப்பு   உற  -  மனம்  கோபப்படவும்;
கடிதின் ஏகி
- (அவ்விடம்  விட்டு) விரைவிலே  சென்று; எண்மரில்
வலியன் ஆய
- எண்