பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்373

  
   

“சினக் கொடுந் திறலோய்! முன்னர்த்
   தேசிகற் பிழைத்து. வேறு ஓர்
நினக்கு இதன் நாடி நின்றர்;
   நீசன் ஆய் விடுதி” என்றான்.
 

(திரிசங்கு வசிட்டனை நோக்கி) ஐய- தலைவனே!” நினக்கு ஒலாது
ஆகின்  -  (என்னை   இவ்வுடம்போடு  சொர்க்கம்  ஏற்றும்  செயல்)
உனக்கு  முடியாது என்றால்;  நீள்  நிலத்து  - பெரிய இப்பூவுலகில்;
யாவரேனும்
-  எவராயினும்;   மனக்கு   இனியாரை நாடி - என்
மனதுக்கு   இசைந்தவரைத்   தேடி;    யான்  வேள்வி வகுப்பல்-
(அவரைக் கொண்டு) எண்ணிய  யாகத்தை  நான் செய்வேன்;  என்ன
-  என்று  கூற;  (வசிட்டன்  கோபங்கொண்டு அவனை நோக்கி);
சினம்  கொடு  திறலோய் 
-   சினமும்   கொடிய    வலிமையும்
உடையவனே!; முன்னர்த் தேசிகன் - முன்னோர்களின்  குருவினிடம்;
பிழைத்து
- அபசாரப்பட்டு (அவனை நீக்கி);  வேறு  ஓர்  நினக்கு
இதன்
- உனக்கு விருப்பமானவேறொரு குருவை; நாடி நின்றாய்- (நீ)
தேடி நின்றாய்; (ஆதலால்); நீசன் ஆய் - புலையனாய்;  விடுதி -
ஆகி  விடுவாய்;  என்றான்  -  என்று சபித்தான்.   

பரம்பரையான     ஆசிரியன்  தகுந்தவனாகியிருக்க    அவனை
அவமதித்து  வேறொரு  குருவைத் தேடுதல் முறைகேடானது. இதன் -
ஹிதன்;நீசன்- சண்டாளன். 109
   

589.‘மலர் உளோன் மைந்தன் - மைந்த! -
   வழங்கிய சாபம்தன்னால்
அலரியோன்தானும் நாணும்
   வடிவுஇழந்து. அரசர் கோமான்.
புலரிஅம் கமலம்போலும்.
   பொலிவு ஒரீஇ. வதனம். பூவில்
பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த
   படிவம் வந்துற்றது அன்றே.
 

மைந்த    - இளைஞனான இராமனே! மலருளோன் மைந்தன் -
பிரமதேவன் மகனான வசிட்டன்; வழங்கிய சாபம் தன்னால் - இட்ட
சாபத்தால்;  அரசர்  கோமான்  -  அரசர்  தலைவனான  திரிசங்கு;
அலரியோன்   தானும்  
-  கதிரவனும்;  நாணும்  வடிவு  இழந்து
- வெட்கப்படுமாறு இருந்த தன்  அரச  வடிவத்தை நீங்கி; புலரி அம்
கமலம்  போலும்
-  உதய  காலத்தில்  மலர்கின்ற தாமரை போன்ற;
வதனம்  பொலிவு  ஒரீஇ
-  திருமுகத்தின் அழகு  கெட்டு;  பூவில்
பலரும்
- பூவுலகில் எல்லோரும்; இகழ்தற்கு ஒத்த படிவம் -