கானிடை - வனத்திலே; சிறிது வைகல் கழித்து - சில நாட்களைப் போக்கி; ஓர் நாள் - ஒரு நாள்; கௌசிகன் பேர் கோன் - கௌசிகன் என்ற நாமம் பெற்ற இவ்வரசன்; இனிது உறையும் - இனிதாகத் (தவம் செய்வது) வசிக்கிற; சோலை குறுகினன் - சோலையைத் (திரிசங்கு நாடிச்) சேர்ந்தான்; குறுக - அணுகிய அளவில்; அன்னான் - அக்கௌசிகன்; ஈனன் நீ யாவன் - சண்டாளனான நீ யார்; இவ் இடையின் நேர்ந்தது என்னை - இந்த இடத்திற்கு வந்ததன் காரணம் என்ன; என்ன - என்று வினவ; வேந்தன் - திரிசங்கு; வணங்கி - (கௌசிகனை) வணங்கி; மேல் நிகழ் பொருள்கள் - முன் நடந்த செய்திகள்; எல்லாம் விளம்பினன் - அனைத்தையும் சொன்னான். வசிட்டனுக்குப் பகைவன் விசுவாமித்திரன் என்று கருதித் திரிசங்கு அவ் விசுவாமித்திரனை அடைந்தான். மேல் நிகழ் பொருள்கள்: வசிட்ட சாபம் முதலியன. 112
கௌசிகன் வேள்விசெய்து. திரிசங்குவை வானுலகு ஏற்றுதல் |