பக்கம் எண் :

376பால காண்டம்  

மற்று     உலகு: இவ் வுலகினும் வேறாகிய உலகம்:    சுவர்க்கம்.
நூற்கொள்கைக்கு   மாறாக   அரசனான   விசுவாமித்திரன்  வேள்வி
செய்யப்   புரோகிதன்   ஆதலும்.  யாகம்  செய்யும்  தலைவனாகச்
சண்டாளன்  அமைதலும் தகாத செயல்கள் ஆதலால் வசிட்ட குமாரர்
கௌசிகன்  அழைப்பை  ஏற்கவில்லை  எனலாம். நகுதல்-வசிட்டனை
இகழ்தல் காரணமாகப் பிறந்தது.                             113
   

593.‘என்று உரைத்து. “யாங்கள் ஒல்லோம்”
   என்றனர்; என்னப் பொங்கி.
“புன்தொழில் கிராதர் ஆகிப்
   போக” எனப் புகறலோடும்.
அன்று அவர் எயினர் ஆகி.
   அடவிகள்தோறும் சென்றார்;
நின்ற வேள்வியையும் முற்றி..
   ‘நிராசனர் வருக!’ என்றான்.
 

என்று உரைத்து - என்று கூறி; யாங்கள் ஒல்லோம் - ‘நாங்கள்
இச்செயலுக்கு உடன்படமாட்டோம்’; என்றனர் - என்று சொன்னார்கள்;
என்ன
-  என்று  கூற  (அதனைக்  கேட்ட  கௌசிகன்); பொங்கி -
கொதிப்பு அடைந்து; புன்தொழில்  கிராதர் - (அவர்களைக் குறித்து)
இழிந்த செயல்புரியும்  வேடர்கள்;  ஆகிப்போக என  - ஆகிவிடக்
கடவீர்கள் என்று; புகறலோடும் - சாபமொழி கூறிய அளவில்; அன்று
-  அப்பொழுதே; அவர் - அவர்கள்; எயினர் ஆகி - வேடர்களாகி;
அடவிகள்    தோறும்   
-    காடுகள்  தோறும்;   சென்றார்  -
போய்விட்டார்கள்;  நின்று  -  (கோசிகனோ)  தொடங்கிய  செயலில்
சிறிதும் சலியாமல் நிலைநின்று; வேள்வியையும் முற்றி - வேள்வியை
முடிக்கத்  தொடங்கி;  நிராசனர் வருக  -  (ஆகுதியை  உண்ணுதற்
பொருட்டு)  தேவர்களே!  நீவிர் வருவீர்களாக!;  என்றான்  - என்று
அவர்களை அழைத்தான்.

    நிராசனர்: தேவர். உணவை வேண்டாதவர் என்பது பொருள்.  114
 

594.“அரைசன் இப் புலையற்கு என்னே
   அனல்துறை முற்றி. எம்மை
விரைசுக வல்லை என்பான்!
   விழுமிது!” என்று இகழ்ந்து நக்கார்.
புரைசை மா களிற்று வேந்தை.
   “போக நீ துறக்கம்; யானே
உரைசெய்தேன். தவத்தின்” என்ன.
   ஓங்கினன் விமானத்து உம்பர்.