பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்377

(அழைக்கப்பட்ட     தேவர்கள்) அரைசன் - விசுவாமித்திரன்; இப்
புலையற்கு  
-  இந்தப் புலையனுக்காக;  அனல்  துறைமுற்றி - யாக
காரியத்தை  நிறைவேற்றத்  தொடங்கி;  எம்மை - எங்களை; வல்லை
விரைசுக  என்பான்  
- விரைவில் வருவீராக என்று அழைக்கின்றான்;
என்னே விழுமிது
- மிக நன்று இச்செயல்; என்று இகழ்ந்து - என்று
நிந்தித்து;  நக்கார்  -  ஏளனம்  செய்து  சிரித்தார்கள்  -  புரைசை
மாக்களிறு   -  (ஆயினும்  கோசிகன்  விடாமல்)  கழுத்திலே  கயிறு
கொண்ட யானைப்படையுடைய வேந்தை - அத் திரிசங்குவை  நோக்கி
நீ  துறக்கம்  போய்ச்  சேர்ந்திடுக; யானே தவத்தின் - நானே எனது
தவத்தால்; உரை செய்தேன் - கட்டளையிட்டுக் கூறுகிறேன்; என்ன-
என்று சொல்ல (அவ்வாறே திரிசங்கு); விமானத்து உம்பர் -(கிடைத்த
ஒரு) விமானத்தின் மேல்; ஓங்கினன் - ஏறி உயரச் சென்றான்.
 

கோசிகன்     வெகுநேரமாக மந்திரங்களைச் சொல்லி அழைத்தும்
அவிர்ப்  பாகத்தைப்  பெறத்  தேவர்கள் வாராமையால் பெருஞ்சினம்
கொண்டான்;  ஓமம்  செய்யும்  அகப்பையை  உயர  எடுத்து. ‘யாகம்
இருக்கட்டும்  என்  தவத்தின்  பயனால்  இவ் வுடம்புடன்  சுவர்க்கம்
செல்லுக.  என்றான்;  முனிவர்  யாவரும் காணத் திரிசங்கு  சுவர்க்கம்
சென்றான்  என்பது.  விழுமிது  -  இகழ்ச்சிக்  குறிப்பு:  எதிர்  மறை
இலக்கணை.                                             115

                          தேவர்கள் தள்ளிய திரிசங்குவைக்
                           கௌசிகன் மேலேயே நிற்கச் செய்தல்
 

595.‘ஆங்கு அவன் துறக்கம் எய்த.
   அமரர்கள் வெகுண்டு. “நீசன்
ஈங்கு வந்திடுவது என்னே?
   இரு நிலத்து இழிக!” என்ன.
தாங்கல் இல் கவிழ்வான். மற்று.
   “தாபதா! சரணம்” என்ன.
ஓங்கினன். “நில் நில்!” என்ன
   உரைத்து. உரும் ஒக்க நக்கான்.
 

ஆங்கு    - அவ்வாறு; அவன் - அவ்வரசன்; துறக்கம் எய்த -
சுவர்க்கத்தை   அடைய;   அமரர்கள்   -  (அதுகண்ட)  தேவர்கள்;
வெகுண்டு  
-   சினந்து;  நீசன்   ஈங்கு   -   சண்டாளனான  நீ
அவ்வுடம்போடு இவ்விடத்தே; வந்திடுவது என்னே - வந்து சேர்வது
என்ன நீதி?; இரு நிலத்து இழிக - பூமியிலே இறங்கு வாயாக; என்ன
-  என்று  கூறித்  தள்ள; தாங்கல்  இல்  -  தன்னைத்  தாங்குவார்
இல்லாதவனாய்;  கவிழ்வான்  -  (தலைகீழாக)  விழும்  அத்திரிசங்கு;
மற்று  
-  பின்பு (கோசிகனை நோக்கி); தாபதா - முனிவனே; சரணம்
என்ன  
-  ‘நீயே  எனக்குப்  புகலிடம்’  என்று  ஓலமிட (அதுகேட்ட
கோசிகன்);