பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்379

கறைத் தரு களனும். மற்றைக்
   கடவுளர் பிறரும். தொக்கு.
“பொறுத்தருள். முனிவ! நின்னைப்
   புகல் புகுந்தவனைப் போற்றும்
அறத் திறன் நன்று; தாரா
   கணத்தொடும் அமைக. அன்னான்.
 

நறைத்   தரு   உடைய-  மணமுள்ள கற்பகத் தருவையுடைய;
கோனும்  
-   இந்திரனும்;   நான்முகக்  கடவுள்தானும்  -  நான்
முகனான பிரமனும்; கறைத்  தருகளனும்  -  நஞ்சுக்  கண்டமுடைய
உருத்திர மூர்த்தியும்;   மற்றைக்    கடவுளர்  பிறரும்  -  மற்றத்
தேவர்களும். முனிவர்களும்;  தொக்கு  -  ஒருங்கு  கூடி; முனிவ -
(கௌசிகனை நோக்கி)   முனிவனே;   பொறுத்தருள் -  (தேவர்கள்
உன்னை இகழ்ந்ததை) பொறுத்தருள்க; நின்னைப் புகல் புகுந்தவனை
- உன்னைச் சரணம் அடைந்தவனை; போற்றும் - கைவிடாது காக்கும்;
அறத்திறன்
-  தருமநெறி; நன்று - மிக நன்று; அன்னான் - அந்தத்
திரிசங்கு அரசன்; தாரா கணத்தொடும் - நட்சத்திரக் கூட்டத்தோடும்;
அமைக
- பொருந்தி இருப்பானாக.                          118

                    கௌசிகன் மேலைத்திசை சென்று தவம் புரிதல்
 

598.“அரச மா தவன் நீ ஆதி;
   ஐந்து நாள் தென்பால் வந்து. உன்
புரை விளக்கிடுக!” என்னா.
   கடவுளர் போய பின்னர்.
நிரை தவன் விரைவின் ஏகி.
   நெடுங் கடற்கு இறைவன் வைகும்
உரவு இடம்அதனை நண்ணி.
   உறு தவம் உஞற்றும் காலை.
  

அரச மாதவன்- சிறந்த அரசமுனி; நீ ஆதி - நீ ஆவாய்; ஐந்து
நாள்  தென்பால்  
-  (வடக்கேயுள்ள இருபத்தேழு நட்சத்திரங்களுள்)
ஐந்து  நட்சத்திரங்கள்  தெற்குத் திசை; வந்து உன்புரை - வந்திருந்து
உன்  மேன்மையை  ; விளக்கிடுக  -  தெரிவிக்க கடவன; என்னா -
என்று  சொல்லி  (கௌசிகனைச்  சமாதானப்படுத்திவிட்டு);  கடவுளர்
போய பின்னர்
- தேவர்கள் புறப்பட்டுப் போன பின்பு; நிரை தவன்
- நேர்மையான  அத்தவ   முனிவன்;  விரைவின் ஏகி - வேகமாகச்
சென்று; நெடுங்கடற்கு  இறைவன் - பெரிய கடலுக்குத் தலைவனான
வருணன்; வைகும் - (திக்குப் பாலகனாக) தங்கப்பெற்று; உரவு இடம்
அதனை
- வலிய இடமான மேற்குத் திசையை; நண்ணி -