பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்381

   
   

பெற்றவள். “இளவல் எற்கே”
   என்றனள். பிதா. “முன்” என்றான்;
மற்யை மைந்தன் நக்கு.
   மன்னவன்தன்னை நோக்கி.
 

கொற்றவன் - (அவ்வாறு சென்ற) அம்பரீடன்; நல் தவம் ரிசிகன்
- சிறந்த தவ  முனிவனான ரிசிகன்; வைகும் நனைவரும் - வசிக்கும்
அரும்பு   மலரும்;   பழுவம்  நண்ணி  -  சோலையை  அடைந்து;
வினவலோடும்
- (வந்த செய்தி கூறி அவனுடைய மக்களில் ஒருவனை
விலைக்கு) கேட்ட  அளவில்;  இசைந்தனர்  குமரர் தம்முள் - தன்
புதல்வர்களாக அமைந்த  மூவருள்;  இளவல்  எற்கே - இளையவன்
எனக்கே உரியவன் (அவனை விற்க முடியாது); என்றனள் பெற்றவள்
- என்று சொன்னாள் தாயான ரிசிகன் மனைவி; பிதா முன் என்றான்
-   தந்தையோ  மூத்தவன்  தனக்கே  உரியவன்  என்று சொன்னான்;
மற்றைய  மைந்தன்  
- எஞ்சி நின்ற நடுப்பிள்ளை யான சுனச்சேபன்
என்பன்;  நக்கு  -  (பெற்றோர்  இருவரும் பெற்று வளர்த்த தன்னை
விலைப்படுத்தற்கு   உடன்பட்டதை   அறிந்து)  சிரித்து;  மன்னவன்
தன்னை நோக்கி
- (தான்) அம்பரீட மன்னனைப் பார்த்து.
   

பிருகுதுங்க     மலையில்  தங்கியிருந்த  ரிசிகளை   அம்பரீடன்
கண்டான்; தன் கருத்தைத்  தெரிவித்தான். தந்தையோ மூத்த மகனை
விலைக்குத்  தர  இயலாது  என்றான்;  தாயோ இளைய மைந்தனைக்
கொடுக்க முடியாது என்றாள். இது கண்டு வருந்திய நடுப்பிள்ளை தன்
குடும்பத்தின்   வறுமை   அகல  அம்பரீடனிடம்  தன்  இசைவைத்
தெரிவித்தான். முன் - காலவாகு பெயர்.                      121

 
   சுனச்சேபனைப் பெற்ற அம்பரீடன் வழியில் கோசிகனைக் காணல்
 

601.“கொடுத்தருள் வெறுக்கை வேண்டிற்று.
   ஒற்கம்ஆம் விழுமம்குன்ற.
எடுத்துஎனை வளர்த்த தாதைக்கு”
   என்று அவன்-தொழுது. வேந்தன்
தடுப்ப அருந் தேரின் ஏறி.
   தடை இலாப் படர்தலோடும்.
சடர்க் கதிர்க் கடவுள் வானத்து
   உச்சி அம் சூழல் புக்கான்.
 

எனை எடுத்து வளர்த்த -என்னை எடுத்து வளர்த்த; தாதைக்கு-
தந்தைக்கு (ரிசிகனுக்கு); ஒற்கம்ஆம்  விழுமம்  குன்ற  -  வறுமைத்
துன்பம் கெடும்படி;  வேண்டிற்று  வெறுக்கை  - (அவன்) விரும்பும்
செல்வத்தை;   கொடுத்து    அருள்   -   (எனக்கு   விலையாகக்)
கொடுத்தருள்க; என்று -  என்று  (அரசனை நோக்கிக்) கூறி;  அவன்