பக்கம் எண் :

382பால காண்டம்  

தொழுது - தந்தையை  வணங்கி; வேந்தன்  தடுப்பரும் -அரசனது
தடுக்க இயலாத;  தேரின் ஏறி  -  இரதத்தின் மேல் ஏறிக் கொண்டு;
தடை  இலாப் படாத்லோடும் 
- ஒரு தடையும் இல்லாமல் இருவரும்
செல்லுகையில்; சுடர்க் கதிர்க் கடவுள் - ஒளிவிடும் கதிர்களையுடைய
சூரியன்; வானத்து உச்சி - வானத்தின் நடுப்பகுதியாகிய; அம் சூழல்
புக்கான்
- இடத்தை அடைந்தான்.   

ஒற்கம்:  வறுமையால் உண்டான தளர்ச்சி. தன்னை இதுவரை பேணி
வளர்த்த   உதவிக்குக்   கைம்மாறாகத்  தன்னை  விற்றுச்  செல்வம்
பெறுமாறு வேண்டினான். தேரின் ஏறி: தேரின் ஏற. செயவென் எச்சம்
செய்தெனத் திரிந்தது.                                      122
   

602.‘அவ் வயின் இழிந்து வேந்தன்
   அருங் கடன் முறையின் ஆற்ற.
செவ்விய குரிசில்தானும்
   சென்றனன். நியமம் செய்வான்;
அவ்வியம் அவித்த சிந்தை
   முனிவனை ஆண்டுக் காணா..
கவ்வையினோடும் பாத
   கமலம்அது உச்சி சேர்த்தான்.
 

(அப்பொழுது)  வேந்தன் - அம்பரீடன்; அவ்வயின் - (கோசிகன்
தவம்  புரியும்)  அந்த  இடத்தில்;  இழிந்து  -  தேரிலிருந்து இறங்க;
அருங்   கடன்  முறையின்  
-  அரிய  கடைக்காலக்  கடமைகளை
முறைப்படி; ஆற்ற  -  செய்வதற்காக;  செவ்விய குரிசில்தானும்  -
உத்தமனான   சுனச்சேபனும்;  நியமம்  செய்வான்  -  நடுப்பகலில்
வைதிகக்  கடனைச்  செய்யும் பொருட்டு; சென்றனன் - (தேரிலிருந்து
இறங்கிப்)  போனான்;  ஆண்டு  -  (போனவன்)  அந்த  இடத்திலே;
அவ்வியம்  அவித்த  
- பொறாமை முதலிய தீக் குணங்களை நீக்கிய;
சிந்தை முனிவனை
- தூய மனத்தனான கோசிக முனிவனை; காணா-
கண்டு;  கவ்வையினோடும் - துன்பத்துடனே; பாத கமலம் அது  -
திருவடித் தாமரைகளை; உச்சி சேர்த்தான் - தலைமேல் சூடினான்.

   கவ்வை: மரண அச்சம்                                 123
  
              சுனச்சேபன் தன் குறையைக் கோசிக முனிக்குக் கூறல்
 

603.‘விறப்பொடு வணக்கம் செய்த
   விடலையை இனிது நோக்கி.
சிறப்புடை முனிவன். “என்னே
   தெருமரல்? செப்புக!” என்ன.