| “அறப் பொருள் உணர்ந்தோய்! என்தன் அன்னையும் அத்தன்தானும் உறப்பொருள் கொண்டு. வேந்தற்கு உதவினர்” என்றான். உற்றோன். |
விறப்பொடு - சாவின் அச்சத்தோடு; வணக்கம் செய்த - வணக்கம் புரிந்த; விடலையை - அந்த இளைஞனை; சிறப்பு உடை முனிவன் - சீரிய பண்புள்ள கோசிக முனிவன்; இனிது நோக்கி - இனிமை ததும்பப் பார்த்து; தெருமரல் என்னே - (நீ இவ்வாறு கலங்குவது) என்ன காரணத்தால்?; செப்புக - சொல்லுக; என்ன - என்று கேட்க; உற்றோன் - (அவனைச் சரணாக அடைந்த) சுனச்சேபன்; அறம் பொருள் - தரும நூல்களின் உட் பொருளை; உணர்ந்தோய் - அறிந்தவனே; என்தன் -என்னுடைய; அன்னையும் - தாயும்; தந்தை தானும் - தந்தையும்; உறப் பொருள்- மிகுதியான செல்வத்தை; கொண்டு - பெற்றுக் கொண்டு; வேந்தற்கு - அம்பரீட மன்னவனுக்கு; உதவினர் - (நரமேத வேள்விக்காக) என்னைக் கொடுத்துவிட்டார்கள்; என்றான் - என்று (நடந்த செய்தியைச்) சொன்னான். |
சிறப்பு: சரண் அடைந்தவனைக் கைவிடாது காக்கும் உறுதியும் தவ ஒழுக்கமும். அறம் - காரியவாகு பெயர். ‘விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும்’ தொல். உரி.52 சேனா. 124
கோசிகன் அவனுக்குப் பதில் தன் மக்களுள் ஒருவரை ஏகுமாறு சொல்ல அவர் மறுத்தல் |
| 604. | ‘மைத்துனனோடு முன்னோள் வழங்கிய முறைமை கேளா. “தத்துறல் ஒழி நீ; யானே தடுப்பென். நின் உயிரை” என்னா. புத்திரர் தம்மை நோக்கி. “போக வேந்தோடும்” என்ன. அத் தகு முனிவன் கூற. அவர் மறுத்து அகறல் காணா. |
முன்னோள் - (தனக்கு) முன் பிறந்தவளும்; மைத்துனனோடு - (அவள் கணவனாகிய மைத்துனன்) ரிசிகனும்; வழங்கிய - (பிள்ளையை) விலைக்குக் கொடுத்துவிட்ட; முறைமை - செய்கையை; கேளா - கேட்டு; அத் தகு முனிவன் - தக்கவனாகிய அம்முனிவன்; நீ - (சுனச்சேபனை நோக்கி) நீ; தத்துறல் ஒழி - அச்சப்படுவதை நீக்குவாயாக; யானே நின் உயிரை - நானே உனது உயிரை; |