மாமுனி - பெருந்தவ முனிவனான வசிட்டனது; வெகுளி தன்னால் - கோபத்தால்; மடிகலா - (முன்பு) இறவாது இருந்த; மைந்தர் நால்வர்தாம் - தன் மைந்தர் நால்வரும்; உறு சவரர் ஆக - இழிந்த வேடராகும்படி; சபித்து - (விசுவாமித்திரன்) சபித்துவிட்டு; எதிர் - (அதன்பின்பு) தனக்கு எதிரில் நின்ற; கோ மருகனுக்கு - மருமகனான சுனச்சேபனுக்கு; சலித்த சிந்தை - கலங்கிய மனத்தோடு; ஏமுறல் ஒழிக - துன்பம் அடைவதை நீக்குக; இன்னே - இப்பொழுதே; இரண்டு விஞ்சை - இரண்டு மந்திரங்களை; பெறுக - பெற்றுக் கொள்க; என நல்கி - என்று அவற்றை (உபதேசம் மூலம்) கொடுத்தருளி; பின்னரும் - மீண்டும்; குணித்தல் உற்றான் - வரையறுத்து உரைக்க முற்பட்டான். மடிகலார்: காமதேனுவைக் கோசிகன் அடைய முயன்ற காலத்தில் வசிட்டனால் சபிக்கப்பட்டவன். எஞ்சியவர் நால்வர் மட்டுமே. சவரர்-சபரர். வேடர். 127 |