உன் உயிர்க்கும்; ஈறு உண்டாகா - இறுதி உண்டாகாது; என்ன - என்று (தன் மருமகனிடம்) சொல்ல; பழிச்சொடும் - (அது கேட்டு அவன்) வணங்கித் துதிமொழிகள் கூறியவனாக; பெயர்ந்து போனான் - (அவ்விடத்தை விட்டு) நீங்கி அரசனோடு சென்றான். |
அணைக்குபு: அணைக்க; அரசன் முனி மைந்தனைச் சந்தனம். மாலை முதலியவற்றால் அலங்கரித்து நரமேத்திற்காக அழைத்துச் சென்றானாதலால் கோசிகன் அவைனைப் ‘பிரசம் மென் தாரோய்’ என விளித்தான். யூபம்: யாகப் பசுவைக் கட்டும் தூண். இரண்டு மந்திரங்கள் 1. பலியை உண்பவனாகிய இந்திரனைத் துதிப்பது. 2. யூபத் தூணின் தேவதையான உபேந்திரனைத் துதிப்பது. 128
வேள்வி முற்றலும் கௌசிகன் வடதிசை ஏகலும் |
608. | ‘மறை முனி உரைத்த வண்ணம் மகத்து உறை மைந்தன் ஆய. சிறை உறு கலுழன். அன்னம். சே. முதல் பிறவும் ஊரும் இறைவர் தொக்கு அமரர் சூழ. இளவல்தன் உயிரும். வேந்தன் முறை தரு மகமும். காத்தார்; வடதிசை முனியும் சென்றான். |
மறைமுனி - வேதங்களையறிந்த கோசிக முனிவன்; உரைத்தவண்ணம் - கூறியபடியே; மைந்தன் - அந்தக் குமாரன்; மகத்து உரை- யாகம் செய்யும் இடத்தில் (தியானிக்க); சிறை உறுகலுழன் - வலிமையான சிறகுள்ள கருடனும்; அன்னம் - அன்னமும்; சே - காளையும்; முதல் பிறவும் - முதலிய பிற ஊர்திகளையும்; ஊரும் - ஏறி நடத்தும்; இறைவர் - (திருமால். பிரமன். சிவன் முதலிய) தலைமைத் தேவர்கள்; அமரர் சூழ - மற்றைத் தேவர்கள் தம்மைச் சூழ்ந்து வரும்படி; தொக்கு - (அவ் வேள்விச் சாலைக்கு) திரண்டு வந்து; இளவல்தன் உயிரும் - அந்த இளைஞனது உயிரையும்; முறைதரு - வேதமுறைப்படி செய்யப்படும்; வேந்தன் மகமும் - அவ்வரசனது யாகத்தையும்; காத்தார் - (அழியாதவாறு) பாதுகாத்தார்; முனியும் - கோசிக முனிவனும்; வடதிசை சென்றான் - (மேற்குத் திசையில் தனது தவம் முடியாததால்) வடதிசை நோக்கி போனான். |
ஊர்திகள்; இந்திரனுக்கு - வெள்ளை யானை. அக்கினிக் கடவுளுக்கு - ஆட்டுக்கடா. இயமனுக்கு - எருமைக்கடா. 129 |