தமம் - இருளானது; திரண்டு - மிகுதியாக ஒருங்கு சேர்ந்து; உலகு யாவையும் - உலகங்கள் எல்லாம்; தாவுற - பரவி நிற்க (அதனால்); நிமிர்ந்த வெம்கதிர் - சூரியனது வெப்பமான கதிர்களின்; கற்றையும் நீங்குற - தொகுதியும் மறைந்து போக; கமந்து மாதிரக் காவலர் - வானுலகில் நிறைந்த திக்குப் பாலகர்களின்; கண்ணொடும் - கண்களுடன்; சுமந்த நாகக் கண்ணும் - பூமியைத் தாங்கும் திக்கு யானைகளின் கண்களும்; சும்புளித்தவே - கூசின. கமந்த: ‘கமம்’ என்ற உரிச்சொல்லின் வினை விகற்பமாகும். (தொல். உரி.59) சும்புளித்தல்: மாதிரக் காவலர்: கிழக்கு-இந்திரன். தென் கிழக்கு - அக்கினி. தெற்கு - இயமன். தென்மேற்கு-நிருதி. மேற்கு - வருணன். வடமேற்கு - வாயு. வடக்கு - குபேரன். வடகிழக்கு - ஈசானன். 132 |