பக்கம் எண் :

  மிதிலைக் காட்சிப் படலம்389

                     தேவர்கள் கௌசிகனைப் பிரம இருடியாக்கல்
 

613.

‘புண்டரீகனும். புள் திருப் பாகனும்.
குண்டை ஊர்தி. குலிசியும். மற்று உள
அண்டர்தாமும். வந்து. அவ் வயின் எய்தி. வேறு
எண் தபோதனன்தன்னை எதிர்ந்தனர்.
 

புண்டரீகனும்   -  தாமரையில்  வாழும்  பிரமனும்;  புள் திருப்
பாகனும் 
-  கருடனுக்குச்  சிறந்த பாகனாகிய திருமாலும்;  குண்டை
ஊர்தி(யும்)
-  காளை    வாகனத்தையுடைய   சிவனும்;   குசிலியும்
- வச்சிரப் படையுடைய  இந்திரனும்;  மற்று உள அண்டர்தாமும் -
மற்றுமுள்ள தேவர்களும்;  வேறு  வந்து அவ்வயின் எய்தி - தனித்
தனியாக வந்து அவ்விடத்தில் சேர்ந்து;  எண் தபோதனன்  தன்னை
- யாவராலும் மதிக்கப்படும்    தவச்    செல்வனான     முனிவனை;
எதிர்ந்தனர்  
- சந்தித்தார்கள்.    

படைத்தல்.     காத்தல்.   அழித்தல்   என்னும்   தொழில்களின்
முறைமைப்படி  பிரமன்.  திருமால்.  சிவன்  என்று வைத்தார்.  புள் -
பறவைக்கு     அரசாகிய     கருடன்.     குண்டை    ஊர்தி    -
பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.           134
   

614.‘பாதி மா மதி சூடியும். பைந் துழாய்ச்
சோதியோனும். அத் தூய் மலராளியும்.
“வேத பாரகர்” வேறு இலர். நீ அலால்;
மா தபோதன!” என்ன வழங்கினர்.
 

மா பாதி   மதி  சூடியும்  -  கலை  குறைந்த  சிறந்த  பிறைச்
சந்திரனைத்  சூடிய சிவனும்; பைந்துழாய் - பசுமையான திருத்துழாய்
அணிந்த; சோதியோனும் - சோதியான திருமாலும்;  அத் தூய்மலர்
ஆளியும்
-  தூய  தாமரை  மலரில்  உறையும்  பிரமனும்  (ஆகிய
மும்மூர்த்திகளும்); மா தபோதன - (அம் முனிவனை நோக்கி) சிறந்த
தவச்  செல்வனான பெருமுனிவனே;  வேத  பாரகர் - வேதங்களின்
கரை  கண்டு  உணர்ந்தவர்;  நீ அலால் வேறு இலர்  -  உன்னை
அல்லாமல் (உலகில்) வேறு யாரும் இலர்; என்ன வழங்கினர்- என்று
உபகார மொழி கூறிப் புகழ்ந்தார்கள்.   

‘வேத     பாரகனும் மா தபோதனனும் நீயே’ என்றதனால் ‘பிரம
இருடியே  நீ’  என்பது  விளங்கும்.  திருமகள்  வாழும் இடமாதலின்
தாமரை மலர் தூய்மலர் எனப்பட்டது.                        135