பக்கம் எண் :

390பால காண்டம்  

615.‘அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன்.
சென்னி தாழ்த்து. இரு செங்கை மலர் குவித்து.
“உன்னு நல் வினை உற்றது” என்று ஓங்கினான்.
துன்னு தேவர்தம் சூழலுள் போயினார்.
 

அன்ன    வாசகம் - (பெருந்தேவர்களின்) அந்த வார்த்தைகளை;
கேட்டு உணர்
- செவிகளில் கேட்டு அறிந்த; அந்தணன் - கௌசிக
முனிவன்; சென்னி தாழ்ந்து  -  தலைவணங்கி;  இரு  செங்கமலம்
குவித்து
-  தாமரை  போன்ற  இரு  கைகளையும்  கூப்பி; உன்னும்
நல்வினை
- யாவராலும் கருதப்படுகின்ற நல்ல தவப்பயன்; உற்றது -
(எனக்கு   வந்து) பொருந்தியது;   என்று   ஓங்கினான்  -  என்று
பூரிப்படைந்தான்;  துன்னு தேவர்  -  (பின்பு) அங்கு வந்து சேர்ந்த
தேவர்களும்;  தம்  சூழலுள் - தத்தம்  இடத்திற்கு;  போயினார் -
சென்றார்கள்.                                            136  

                     சதானந்தர் குமரர்களை வாழ்த்திப் பெயர்தல்
 

616.‘ஈது முன்னர் நிகழ்ந்தது; இவன் துணை
மா தவத்து உயர் மாண்பு உடையார் இலை;
நீதி வித்தகன்தன் அருள் நேர்ந்தனிர்;
யாது உமக்கு அரிது?’ என்றனன். ஈறு இலான்.
 

முன்னர்- முன்னே; நிகழ்ந்தது ஈறு - நடந்த வரலாறு இதுவாம்;
இவன்  துணை  
- இந்தக் கௌசிகனுக்கு ஒப்பாக; மா தவத்து உயர்
- பெருந்தவத்தால் உயர்ந்த; மாண்பு உடையார்-மாட்சிமையுடையவர்;
இலை 
- வேறு  யாரும்  இல்லை;  நீதி  வித்தகன்தன் - நியம நீதி
தவறாதவனும்   மெய்யுணர்வுடையவனும்   ஆகிய  இம்  முனிவனது;
அருள் நேர்ந்தனிர் 
- கருணையை நீங்கள் பெற்றுள்ளீர்கள்; உமக்கு
அரிது  யாது
-  (ஆதலால்) உங்களுக்குச் செய்வதற்கு அரிய செயல்
யாது உள்ளது; என்றனன் - என்று (இராம இலக்குவர்களை நோக்கிச்)
சொல்லி  முடித்தான்; ஈறு  இலான்  -  (சொன்னவன்  யாரென்றால்)
எல்லையில்லாத நற்குணத்தவனான சதானந்த முனிவன்.
    

ஈறு இலான்: ஆனந்தத்திற்கு முடிவு இல்லாதவன் என்பர்.      137
 

617.என்று கோதமன் காதலன் கூறிட.
வென்றி வீரர் வியப்பொடு உவந்து எழா.
ஒன்று மா தவன் தாள் தொழுது ஓங்கிய
பின்றை. ஏத்திப் பெயர்ந்தனன். தன் இடம்.
 

என்று கோதமன் - என்று  (இவ்வாறு)  கௌதம  முனிவனுடைய;
காதலன் கூறிட
- மைந்தனாகிய சதானந்த முனிவர் சொல்ல;