வென்றி வீரர்- வெற்றி வீரர்களாகிய இராமலக்குவர்; வியப்பொடு - அதியத்தோடு (கேட்டு); உவந்து எழா - மகிழ்ச்சியடைந்து எழுந்து; ஒன்றும் மாதவன் - பெருமை பொருந்திய தவத்தோனான அம்முனிவரின்; தாள் தொழுது - அடிகளில் விழுந்து வணங்கி; ஓங்கிய பின்றை - (எழுந்த) பின்பு; ஏத்தி - அச் சதானந்த முனிவன் (அக் குமாராக்ளை) - வாழ்த்திவிட்டு; தன் இடம் பெயர்ந்தனன் - தன் இடத்திற்குப் போனான். 138
இராமன் சீதையை நினைத்தல் |
| 618. | முனியும் தம்பியும் போய். முறையால் தமக்கு இனிய பள்ளிகள் எய்தியபின். இருட் கனியும். போல்பவன். கங்குலும். திங்களும். தனியும். தானும். அத் தையலும். ஆயினான். |
முனியும் - கோசிக முனிவனும்; தம்பியும் - இலக்குமணனும்; போய் - சென்று; முறையால் - வழக்கப்படியே; தமக்கு இனிய - தத்தமக்கு இனிமையான; பள்ளிகள் - படுக்கையிடங்களை; எய்திய - அடைந்த; பின் - பின்பு; இருள் கனியும் இருள் மயமான கனியை; போல்பவன் - ஒப்பவனான இராமபிரான்; கங்குலும் - இரவும்; திங்களும் - சந்திரனும்; தனியும் - தனிமைப்பாடு என்ற ஒன்றும்; தானும் - தானும்; அத் தையலும் - அச் சீதையாக; ஆயினான் - ஆனான். |
இரவில் நிலா வீசும்பொழுது இராமன் தனியனாகத் தான் இருந்த நிலையில் சீதை பற்றிய சிந்தனையே ஆகி அவளை உருவெளிப்பாட்டில் கண்டு காதல் மயக்கமுற்றுத் துயிலின்றி இருந்தான் என்பது கருத்து. இருள்கனி: கருநிறத்தாலும். யாவராலும் விரும்பப்படுவதலாலும் இது இராமனுக்கு உவமையாயிற்று. இருள்கனியும்: உம்மை இசைநிறை. 139
சீதையின் உருவெளிப்பாடு கண்ட இராமனின் நிலை |
| 619. | ‘விண்ணின் நீங்கிய மின் உரு. இம் முறை. பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டேகொலோ? எண்ணின். ஈது அலது என்று அறியேன்; இரு கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால். |
விண்ணின் நீங்கிய - மேகத்திலிருந்து நீங்கின; மின்உரு - மின்னலின் வடிவம்; இம்முறை - இவ்வாறு; பெண்ணின் நல்நலம் - பெண்ணின் பேரழகை; பெற்றது - அடைந்துள்ள தன்மை; உண்டே கொலோ - உண்டோ?; எண்ணின் - ஆராய்ந்து பார்த்தால்; ஈது அலது |