ஒன்று அறியேன்- (என் கண்ணிற்குப் புலப்படுகின்ற) இந்தப் பெண் வடிவம் கொண்டு வந்தது வேறு அன்று என்று சொல்வதற்கு இல்லை (ஏனென்றால்); கண்ணினுள்ளும் - (இந்த வடிவத்தை) கண்களிலும்; கருத்துளும் - மனத்துள்ளும்; காண்பென் - (நான்) காண்கிறேன். |
சீதையின் உருவம் அடுத்தடுத்துத் தோன்றியும் மறைந்தும் நிகழ்வதற்கு மின்னல் உருவம் ஏற்புடைத்தால் அறியத் தகும். புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் காண்கின்றேன் என்பதைக் கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பேன் எனக் குறித்தார். காண்பென்: கால வழுவமைதி. 140 |
| 620. | வள்ளல் சேக்கைக் கரியவன் வைகுறும் வெள்ளப் பாற்கடல் போல் மிளிர் கண்ணினாள். அள்ளல் பூமகள் ஆகும்கொலோ- எனது உள்ளத் தாமரையுள் உறைகின்றதே? |
வள்ளல் சேக்கை- வரையாது கொடுக்கும் தன்மை கொண்ட (ஆதிசேடனை) படுக்கையாகக் கொண்ட; கரியவன் - கரிய நிறமுள்ள திருமால்; வைகுறும் - பள்ளி கொள்ளும்; வெள்ளம் - வெள்ளமாகிய; பாற்கடல்போல் - திருப்பாற்கடலைப்போல; மிளிர் - விளங்குகின்ற; கண்ணினாள் கண்களையுடைய பெண்; எனது உள்ளத் தாமரையுள் - என் இதயமாகிய தாமரையில்; உரைகின்றதால் - வசிக்கின்ற காரணத்தால்; அள்ளல்பூமகல் - செந்தாமரை மலரில் (எப்போதும்) வாழ்கின்ற திருமகள்; ஆகும் கொலோ - ஆவாளோ? |
பாற்கடலில் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டருளும் திருமால் - வெண்ணிறமுள்ள கண்ணின் கருநிறக் கண்மணியில் தோன்றும் பாவை. திருமாலின் திருமேனி நிறச் சிறப்பால் கறுத்துத் தோன்றும் சேடனாகிய பாம்பு - பாவையைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் கருவிழி. பாற்கடல் வெள்ளம் - கருமணியைச் சூழ்ந்துள்ள வெண்ணிறப் பரப்பு. 141 |
| 621. | ‘அருள் இலாள் எனினும். மனத்து ஆசையால். வெருளும் நோய் விடக் கண்ணின் விழுங்காலால். தெருள் இலா உலகில். சென்று. நின்று. வாழ் பொருள் எலாம். அவள் பொன் உரு ஆயவே! |
அருள் இலாள் எனினும் - (அவள் என்னிடம்) கருணை இல்லாதவள் ஆயினும்; மனத்து ஆசையால் - என் மனத்தின் (அவளிடம் உண்டான) காதலால்; வெருளும் நோய்விட - கலக்கத்தை உண்டாக்கும் காம நோய் நீங்குமாறு; கண்ணின் - தன் கண்களால்; விழுங்கலால் - (அவள் என்னை) உட்கொண்டதால்; தெருள் இலா உலகில் -தெளிவில்லாத இவ்வுலகிலே; சென்று நின்று - அசைவனவும் இயங்கா தனவுமாகியும; வாழ் பொருள் எலாம் - வாழ்கிற எல்லாப் பொருள் |